பல கோடிக்கு வியாபாரம் ஆன விஜய்யின் லியோ- தெறிக்கும் தளபதியின் மார்க்கெட்
லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் விஜய் தனது 67 படமான லியோவில் நடித்து வருகிறார். இப்படத்தில் விஜய்-த்ரிஷா பல வருடங்களுக்கு பிறகு இணைந்துள்ளதால் ரசிகர்கள் மிகுந்த ஆர்வத்தில் உள்ளனர்.
படத்தின் முதற்பட்ட படப்பிடிப்பு காஷ்மீரில் நடந்து வந்தது, இப்போது சென்னையில் நடைபெற்று வருகிறது. படத்தின் அடுத்தக்கட்ட அப்டேட் எப்போது வரும் என ரசிகர்கள் ஆர்வமாக பார்த்துக் கொண்டிருக்கிறார்.
அடுத்த மாதம் ஜுன் 22, விஜய் பிறந்தநாள் ஸ்பெஷலாக அப்டேட் வரும் என ரசிகர்கள் காத்துக் கொண்டிருக்கிறார்கள்.
விஜய்யின் லியோ படத்திற்கு பெரிய எதிர்ப்பார்ப்பு இருப்பதால் வியாபாரமும் அமோகமாக நடந்து வருகிறது. அதாவது லியோ பட வியாபாரம் ரூ. 400 கோடி வரை ஆனதாக தகவல்கள் வந்துள்ளது.
இதனாலேயே விஜய் வெங்கட் பிரபு இயக்கத்தில் நடிக்கப்போகும் தனது 68வது படத்திற்காக ரூ. 200 கோடி வரை சம்பளம் பெற இருப்பதாக கூறப்படுகிறது.
GIPHY App Key not set. Please check settings