பணியில் அலட்சியம் செவிலியருக்கு 18 மாதம் தடை

 

பிரிட்டனின் பீட்டர்பரோப் சிறைச்சாலை மருத்துவமனையில் செவிலியராக பணிபுரிந்து வருபவர் லெஸ்ஸி வாட்ஸ். இதே சிறையில் அடைக்கப்பட்டிருந்த அனபெல்லா லான்ட்ஸ்பெர்க் என்ற பெண், நீரிழிவு நோயால் பாதிக்கப்பட்டார். இதற்காக அவருக்கு செவிலியர் லெஸ்ஸி வாட்ஸ் சிகிச்சையளிக்க முயன்றபோது அதை ஏற்க மறுத்தார். எனவே அவரை அப்படியே விட்டுவிட்டு செவிலியர் சென்றுவிட்டார். மறுநாள் காலை வந்து ஜன்னல் வழியாக பார்த்தபோது அனபெல்லா சலனமற்ற நிலையில் படுத்துக் கிடந்தார். அப்போதும் அவரை கண்டுகொள்ளாமல் சென்றார் செவிலியர் லெஸ்ஸி வாட்ஸ்.
இந்த சூழலில் சுமார் 21 மணிநேரமாக அவருக்கு சிகிச்சையளிக்கப்படாத காரணத்தால், அவரது உடல்நிலை மோசமாகி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட அவர், சிகிச்சை பலனின்றி சில நாள்களில் உயிரிழந்தார். இச்சம்பவம் கடந்த 2017ஆம் ஆண்டு செப்டம்பரில் நடைபெற்றது.
இதனிடையே பணியில் அலட்சியமாக செயல்பட்ட குற்றச்சாட்டின்கீழ், லெஸ்ஸி வாட்ஸ் தனது பொறுப்பிலிருந்து கடந்த 2019இல் நீக்கப்பட்டார். தற்போது அவருக்கு 18 மாதங்கள் தடைவிதித்து நர்சிங் மற்றும் பணியியல் கழகமும் (என்எம்சி) உத்தரவு பிறப்பித்திருக்கிறது. 3 குழந்தைகளின் தாயான அனபெல்லாவின் சாவுக்கு செவிலியர் காரணமில்லை என்றாலும், கைதிகளிடம் கடினமான வார்த்தைகளை பிரயோகப்படுத்தியதற்காக இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்படுவதாக தெரிவித்துள்ளது.

Add your comment

Your email address will not be published.

nineteen + thirteen =