பட்டாசு வெடித்து கொண்டாடுவேன் அவர் இறந்தால் – நடிகை ரேகா நாயர்
பயில்வான் ரங்கநாதன் இறந்துபோனால் பட்டாசு வெடித்து கொண்டாடுவேன் என நடிகை ரேகா நாயர் தெரிவித்துள்ளார்.இரவின் நிழல் படத்தில் நடித்தன் மூலம் பிரபலமானவர் நடிகை ரேகா நாயர். இந்தப் படத்தில் அவர் நிர்வாணமாக நடித்ததைத் தொடர்ந்து அதுகுறித்து பயில்வான் ரங்கநாதன் முகம் சுழிக்கும் வகையில் பேசியிருந்தார்.தொடர்ந்து, திருவான்மியூரில் அவர் நடைபயிற்சி செய்துகொண்டிருந்தபோது பயில்வானிடம் சண்டைக்கு சென்று அடிக்க முயன்றார்., அவரை செருப்பால் அடித்த சம்பவமும் பரபரப்பை ஏற்படுத்தியது.இந்நிலையில் பேட்டி ஒன்றில் பேசிய ரேகா, “நரகாசூரன் இறந்ததை பட்டாசு வெடித்து தீபாவளியாக கொண்டாடுகிறார்கள். அதுபோல் பயில்வான் ரங்கநாதன் இறந்தால் நான் பட்டாசு வெடித்து கொண்டாடுவேன். ஞாயத்தை சொல்லி சம்பாதிக்கலாம் ஆனால் இல்லாததை சொல்லி சம்பாதிக்கவே கூடாது.நான் பார்த்ததில் மிக மோசமான மனிதர் அவர். நான் திருவான்மியூரில் அவ்வாறு பயில்வானிடம் நடந்துகொண்டதை அடுத்து பெரிய நடிகர்கள் பலர் எனக்கு ஃபோன் செய்து யம்மா உனக்கு கோடி புண்ணியம் என்றார்கள்.ஆண் என்ற போர்வையில் திரியும் பிணம். பிணத்துக்குக்கூட மரியாதை கொடுக்கலாம். ஆனால் இதுக்கெல்லாம் கொடுக்க முடியாது. அது ஒரு ஜந்து என ஆதங்கத்தை கொட்டித் தீர்த்துள்ளார்.
GIPHY App Key not set. Please check settings