in

நெல்லை மாநகராட்சி பள்ளியில் கொண்டாடப்பட்ட குழந்தைகள் தினம்


Watch – YouTube Click

நெல்லை மாநகராட்சி பள்ளியில் கொண்டாடப்பட்ட குழந்தைகள் தினம்

நெல்லை டவுண் மாநகராட்சி பள்ளியில் கோலகலமாக கொண்டாடப்பட்ட குழந்தைகள் தினம்.இயற்கையை பாதுகாக்க வலியுறித்தி இனிப்புகளுடன் ஆயிரத்திற்கும் மேற்பட்ட மாணவிகளுக்கு பேப்பர் விதைப்பந்து பேனா வழங்கி கொண்டாட்டத்தில் ஈடுபட்டனர்.

ஆண்டுதோறும் நவம்பர் 14 ஆம் தேதி “தேசிய குழந்தைகள் தினம்” கொண்டாடப்படுகிறது. சுதந்திர இந்தியாவின் முதல் பிரதமரான ஜவஹர்லால் நேருவின் பிறந்தநாள் தான் இந்தியாவில் குழந்தைகள் தினமாக கொண்டாடப்படுகிறது.

இந்த நாளில் குழந்தைகளின் சிறப்பு பண்புகளையும், திறமையையும் நாம் போற்றிடும் வகையிலும் நாடு முழுதும் உள்ள பள்ளிகளில் சிறப்பு போட்டிகள் நடத்தப்பட்டு பரிசுகள் வழங்கப்படுவதோடு, இனிப்புகள் வழங்கி கொண்டாட்டங்களும் நடைபெறும் சிறப்பிக்கப்படும். நெல்லை மாநகர் பகுதியில் அமைந்துள்ள அதிக எண்ணிக்கையில் மாணவிகள் படிக்கும் பள்ளியான நெல்லை டவுன் பகுதியில் அமைந்துள்ள கல்லணை மகளிர் மேல்நிலைப் பள்ளியில் குழந்தைகள் தின விழா கொண்டாடப்பட்டது

இந்த நிகழ்ச்சியில் சிறப்பு அழைப்பாளராக நெல்லை மாநகராட்சி துணை மேயர் ராஜு கலந்து கொண்டு சிறப்புரையாற்றினார் தொடர்ந்து இயற்கை வளங்களை பாதுகாக்கவும் இயற்கையை பாதுகாக்கவும் வலியுறுத்தி உறுதிமொழி எடுக்கப்பட்டது பின்னர் பேப்பர் விதை ஆகியவை கொண்டு பிரத்யேகமாக தயார் செய்யப்பட்ட பேனாக்கள் பள்ளியில் படிக்கும் ஆயிரத்திற்கும் மேற்பட்ட மாணவிகளுக்கு வழங்கப்பட்டதுடன் குழந்தைகள் தினத்தை கொண்டாடும் முறையில் இனிப்புகளும் வழங்கப்பட்டது தொடர்ந்து பள்ளியில் பல்வேறு கலை நிகழ்ச்சிகள் போட்டிகள் ஆகியவை நடத்தப்பட்டு பரிசுகளும் வழங்கப்பட உள்ளது


Watch – YouTube Click

What do you think?

ஆஸ்திரேலிய கேப்டன் பாட் கம்மின்ஸ் ரிட்டர்ன்

புளியமரம் கொட்டும் மழையில் திடீரென தீப்பற்றி எரிந்ததால் பரபரப்பு