நீரவ் மோடியை நாடுகடத்த பிரிட்டன் ஒப்புதல்

இந்தியாவில் வங்கிக் கடன் மோசடியில் ஈடுபட்டு லண்டனில் தஞ்சம் புகுந்த வைர வியாபாரி நீரவ் மோடியை நாடுகடத்துவதற்கு பிரிட்டன் உள்துறை செயலாளர் பிரீத்தி படேல் ஒப்புதல் தெரிவித்துள்ளார்.

இந்தியாவில் பஞ்சாப் நேஷனல் வங்கியில் ரூ.11 ஆயிரம் கோடிக்கு மேல் கடன் பெற்று அதைத் திருப்பி செலுத்தாமல், லண்டனில் தலைமறைவாக இருந்த நீரவ் மோடி, கடந்த 2019இல் கைது செய்யப்பட்டார். அவர் இந்தியாவில் வழக்குகளை எதிர்கொள்ளும் பொருட்டு, அவரை நாடுகடத்த கடந்த பிப்ரவரியில் வெஸ்ட்மினிஸ்டர் மாஜிஸ்திரேட்டு கோர்ட்டு உத்தரவு பிறப்பித்தது.

தன்னை நாடுகடத்துவதற்கு எதிராக அவர் மேற்கோள்காட்டிய உடல்நலன் சார்ந்த பிரச்னைகளை ஏற்க நீதிமன்றம் மறுப்பு தெரிவித்தது. இந்த நிலையில், அந்த உத்தரவை உறுதிப்படுத்தும் விதமாக, நீரவ் மோடியை நாடுகடத்த பிரிட்டன் உள்துறை அமைச்சகமும் ஒப்புதல் அளித்திருப்பது குறிப்பிடத்தக்கது.

Add your comment

Your email address will not be published.

3 × 3 =