நீதிமன்ற தீர்ப்பால் குஷியான ரக்ஷிதா
பிரபல சின்னத்திரை நடிகையும், பிக்பாஸ் பிரபலமுமான, ரக்ஷிதா குழந்தை விவகாரம் குறித்த நீதிமன்ற தீர்ப்பு ஒன்றை பகிர்ந்து, தன்னுடைய மகிழ்ச்சியை பகிர்ந்து கொண்டுள்ளார். பெங்களூரை சேர்ந்த ரக்ஷிதா மஹாலக்ஷ்மி ‘பிரிவோம் சந்திப்போம்’ சீரியலில் நடித்தார், பின்னர் இந்த சீரியலில் தனக்கு ஜோடியாக நடித்த தினேஷ் என்பவரையே காதலித்து திருமணம் செய்து கொண்டார்.இவர், திருமணத்திற்கு பிறகும்… இளவரசி, சரவணன் மீனாட்சி சீசன் 2, சரவணன் மீனாட்சி சீசன் 3, நாம் இருவர் நமக்கிருவர் சீசன் 2, புது புது அர்த்தங்கள், சத்யா சீசன் 2 போன்ற பல சீரியல்களில் நடித்தார். இதை தொடர்ந்து, கடந்த ஆண்டு நடைபெற்ற பிக்பாஸ் சீசன் 6 நிகழ்ச்சியை கலந்து கொண்டு விளையாடினார் ரக்ஷிதா.
மேலும் பிக்பாஸ் வீட்டின் உள்ளே மஹாலக்ஷ்மி இருந்தபோது… அவரின் கணவர் தினேஷ் தன்னுடைய முழு ஆதரவையும் கொடுத்தார். தங்கள் இருவருக்கு இடையே உள்ள கருத்து வேறுபாட்டுக்கு தன் மீது உள்ள தவறுதான் காரணம் என்றும் வெளிப்படையாக கூறினார். எனவே பிக்பாஸ் வீட்டை விட்டு மஹாலட்சுமி வெளியே வந்த பிறகு கணவருடன் சேர்ந்து வாழ, வாய்ப்பிருப்பதாக கூறப்பட்டாலும்… மஹாலட்சுமி இதுவரை தன்னுடைய கணவரை சந்தித்து பேச கூட முயற்சி செய்யவில்லை. இந்த நிலையில் தற்போது மும்பை நீதிமன்றம் அதிரடி தீர்ப்பை வழங்கியுள்ளது. இதுகுறித்து பகிர்ந்து தன்னுடைய மகிழ்ச்சியை வெளிப்படுத்தியுள்ளார். அதாவது நீதிமன்றம் வழங்கிய தீர்ப்பில் ‘தனியாக வாழும் பெண்கள், வேலைக்கு செல்லும் பெண்கள் குழந்தையை தத்து எடுத்துக் கொள்ளலாம்’ என்று அறிவித்திருந்தது. இந்த பதிவை தனது சமூக வலைதளத்தில் பகிர்ந்த ரக்ஷிதா… ‘இது போதும், இனிமேல் நாங்கள் பார்த்துக் கொள்கிறோம்’ என்று பதிவு செய்துள்ளார். எனவே கூடிய விரைவில் ரக்ஷிதா, பெண் குழந்தையை தத்தெடுப்பார் என தெரிகிறது.
GIPHY App Key not set. Please check settings