நயன்தாரா படத்திற்கு பாடகி சக்திஸ்ரீஇசையமைகிறார்
பிரபல சினிமா பின்னணி பாடகி சக்திஸ்ரீ கோபாலன். இவர் கடல் படத்தில் இடம்பெற்ற ‘நெஞ்சுக்குள்ளே’, நான் படத்தில் இடம்பெற்ற ‘மக்கயல மக்கயல’ மற்றும் பொன்னியின் செல்வன் படத்தில் வரும் ‘அகநக’ போன்ற பாடல்களை பாடி உள்ளார். தெலுங்கு, மலையாள படங்களிலும் பாடி உள்ளார். இந்த நிலையில் நயன்தாரா முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கும் ‘டெஸ்ட்’ படத்தின் மூலம் சக்திஸ்ரீ கோபாலன் இசையமைப்பாளராக அறிமுகமாகி உள்ளார். அவருக்கு ஏ.ஆர்.ரகுமான் வாழ்த்து தெரிவித்து உள்ளார். ‘டெஸ்ட்’ படத்தில் மாதவன், சித்தார்த், நயன்தாரா, ராஷிகன்னா ஆகியோரும் நடிக்கிறார்கள். சசிகாந்த் டைரக்டு செய்கிறார். கிரிக்கெட் கதையம்சம் கொண்ட படமாக உருவாகிறது. படப்பிடிப்பு விரைவில் தொடங்க உள்ளது. தமிழ் திரையுலகில் பெண் இசையமைப்பாளர்கள் அவ்வளவாக இல்லாத நிலையில் நயன்தாரா படத்துக்கு இசையமைக்கும் சக்திஸ்ரீ கோபாலனுக்கு வலைத்தளத்தில் ரசிகர்கள் வாழ்த்து தெரிவித்து உள்ளனர்.
GIPHY App Key not set. Please check settings