நடிக்க கூடாது – கணவர் போட்ட ஆர்டர் – நடிகை அதிர்ச்சி’
\
திரையுலகில் இருக்கும் நடிகைகள் ஒரு சிலருக்கு மட்டுமே திருமணத்திற்கு பிறகும் தங்களது நடிப்பை தொடர அனுமதி அளிக்கப்படுகிறது. அப்படி கல்யாணமான பிறகு காதலித்த கணவருக்காக டாப் சீரியலில் கதாநாயகியாக நடித்த நடிகை ஒருவர் அந்த சீரியலில் இருந்து விலகி இருப்பது சின்னத்திரை ரசிகர்களை அதிர்ச்சியை வைத்துள்ளது.ஜீ தமிழில் சமீபத்தில் துவங்கப்பட்ட சீதாராமன் என்ற சீரியலில் கதாநாயகியாக நடித்துக் கொண்டிருக்கும் பிரியங்கா நல்கரி. ரோஜா சீரியலின் மூலம் சின்னத்திரை ரசிகர்களுக்கு பரிச்சயமானவர் பிரியங்கா நல்கரி இந்த சீரியலுக்கு பிறகு நடிகை பிரியங்கா ஜீ தமிழில் சீதாராமன் சீரியலில் கதாநாயகியாக நடித்து வருகிறார்.இந்நிலையில் பிரியங்காவிற்கும் தெலுங்கு சீரியல் நடிகர் ராகுலுக்கும் கடந்த மார்ச் மாதம் திருமணம் நடந்தது. இப்போது ராகுல் மலேசியாவில் செட்டில் ஆகி இருக்கிறார். ஏற்கனவே ராகுல் மற்றும் பிரியங்கா இருவருக்கும் என்கேஜ்மென்ட் நடந்து முடிந்ததும், இருவருக்கும் கருத்து வேறுபாடு காரணமாக பிரிந்து விட்டனர். அதன் பின் பல வருடம் கழித்து மீண்டும் இவர்கள் இருவரும் காதலித்து திருமணம் செய்து கொண்டுள்ளனர்.மிக எளிமையாகவே இவர்களது திருமணம் நடந்திருக்கிறது. தற்போது பிரியங்கா திருமணத்திற்கு பிறகு அவருடைய கணவரோடு மலேசியா சென்றுவிட்டார். இப்போது சீதாராமன் சீரியலின் ஷூட்டிங்கிற்காகவே மலேசியாவில் இருந்து வந்து போய்க் கொண்டிருக்கிறார். இப்படி செய்வது அவருடைய கணவருக்கு சுத்தமாகவே பிடிக்கவில்லை.அதனால் சீரியலில் இருந்து விலகி விடு, நீ நடித்ததெல்லாம் போதும். நான் இங்கே நல்லா சம்பாதிக்கிறேன் என்று சீரியலில் இருந்து விலகும் படி ஸ்டிட்டாக சொல்லிவிட்டாராம். ஆனால் திருமணத்திற்கு முன்பு ராகுல் இப்படி எல்லாம் கண்டிஷன் போடாததால் பிரியங்கா இது குறித்து அதிர்ச்சியில் இருக்கிறார்

பெண் குழந்தையை தத்தெடுத்து வளர்க்கும் நடிகை அபிராமி

GIPHY App Key not set. Please check settings