நடிகை சமந்தாவிற்கு கோவில் கட்டிய ரசிகர்
நடிகை சமந்தா தமிழ் சினிமா ரசிகர்களால் கொண்டாடப்பட்ட நடிகைகளில் ஒருவர் பல்லாவரத்தில் இருந்து இப்போது பாலிவுட் வரை ரீச் பெற்றுள்ளார். கொடிய நோயால் பாதிக்கப்பட்ட அவர் பல மாதம் சிகிச்சைக்கு பிறகு இப்போது தான் படங்களில் ஆக்டீவாக நடிக்க தொடங்கியுள்ளார். சமீபத்தில் அவரது நடிப்பில் சகுந்தலம் படம் வெளியாகி நல்ல வசூலை பெற்றது, ஆனால் பெரிய அளவில் வெற்றிபெற இல்லை என்பது உண்மை. இந்நிலையில் நடிகை சமந்தாவிற்கு சந்தீப் எனும் ரசிகர் ஆந்திராவில் கோவில் கட்டியுள்ளார். இதுகுறித்து அவர், சமந்தா, பிரத்யூஷா அறக்கட்டளை மூலம் பல சேவைகளை செய்து வருவதை அறிந்து அவர் மீது மதிப்பு கூடியது. இதனால் அவருக்கு கோயில் கட்ட தீர்மானித்தேன். இதற்கு எங்கள் வீட்டில் ஒரு பகுதியை ஒதுக்கி கோயில் கட்டி வருகிறேன். தற்போது இறுதிக்கட்ட பணிகள் நடைபெற்று வருகின்றன. நாளை திறப்பு விழா நடக்கிறது என்றார்.
GIPHY App Key not set. Please check settings