தேவகோட்டையில் நகராட்சி அதிகாரிகள் மெத்தனத்தால் இடிந்து விழுந்த தியாகிகள் பூங்கா: சமூக ஆர்வலர்கள் அதிருப்தி | Devakottai: Municipal officers negligence; Park gets damaged

சிவகங்கை மாவட்டம் தேவகோட்டையில் நகராட்சி அதிகாரிகள் மெத்தனத்தால் தியாகிகள் பூங்கா சுற்றுச்சுவர் இடிந்துவிழுந்தது. இதனால் சமூக ஆர்வலர்கள் அதிருப்தி அடைந்துள்ளனர்.

தேவகோட்டை நகராட்சி அலுவலகம் எதிரே தியாகிகள் நினைவு பூங்கா உள்ளது. இப்பூங்கா அமைந்த இடத்தில் 1942-ம் ஆண்டு நடந்த ஆகஸ்ட் புரட்சியில் 5 தியாகிகளை ஆங்கிலேயர்கள் சுட்டு கொன்றனர். ஏராளமானோர் காயமடைந்தனர். அவர்கள் நினைவாக ஸ்தூபி எழுப்பப்பட்டு பூங்கா அமைக்கப்பட்டது.

இப்பூங்காவை காலப்போக்கில் நகராட்சி அதிகாரிகள் பராமரிக்காமல் விட்டுவிட்டனர். இதனால் பூங்காவை சுற்றி சில ஆக்கிரமித்து சிலர் கடைகள் வைத்திருந்தனர்.

இந்நிலையில் நேற்று சுற்றுச்சுவரில் வியாபாரிகள் சிலர் கரும்புக்கட்டுகளை சாத்தி வைத்திருந்தனர். அதன் எடை தாங்காமல் பூங்கா சுற்றுச்சுவர் இடிந்து விழுந்தது.

தியாகிகள் நினைவாக அமைக்கப்பட்ட இந்த பூங்கா, நகராட்சி அதிகாரிகளின் மெத்தனத்தால் இடிந்துவிழுந்ததாக சமூக ஆர்வலர்கள் அதிருப்தி தெரிவித்தனர். மேலும் இப்பூங்காவை விரைந்து சீரமைக்க மாவட்ட ஆட்சியர் நடவடிக்கை எடுக்க வேண்டுமென, அவர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

நன்றி இந்து தமிழ் திசை