தேசிய சுகாதார சேவை ஊழியர்களின் குடும்பம் பிரிட்டனில் இனி நிரந்தரமாக வசிக்கலாம்!

கரோனா வைரஸ் தாக்குதலால் உயிரிழந்த அயலக தேசிய சுகாதார சேவை ஊழியர்களின் குடும்பத்தினர் பிரிட்டனில் இனி நிரந்தரமாக வசிக்கலாம் என உள்துறை செயலாளர் பிரீத்தி படேல் தெரிவித்திருக்கிறார். உள்துறை அலுவலக துயர்நீக்கும் திட்டம் என பெயரிடப்பட்டுள்ள இத்திட்டத்தின்கீழ், நர்ஸ் உள்ளிட்ட தொழில்முறை பணியாளர் குடும்பத்தினர் மட்டுமே பயன்பெற்றுவந்த நிலையில், கடைநிலை ஊழியர்களின் குடும்பத்தினரும் பயன்பெறும் வகையில், இந்தத் திருத்தம் நடைமுறைப்படுத்தப்பட்டுள்ளது.
அதன்படி, தூய்மைப் பணியாளர்கள், சுமைப் பணியாளர்கள் மற்றும் குறைந்த வருவாய் ஈட்டும் ஊழியர்களின் குடும்பத்தினரும் பயன்பெற வகை செய்யப்பட்டுள்ளது. ஆனால், இலவச விசா நீட்டிப்பு திட்டம் இவர்களுக்கு பொருந்தாது.

இதுகுறித்து உள்துறை செயலாளர் பிரீத்தி படேல் கூறுகையில், கரோனா பேரிடரில் ஒவ்வோர் இறப்பும் துயரமானது. பிறரின் உயிரைக் காப்பதில் தேசிய சுகாதார சேவை ஆதரவு பணியாளர்களும், சமூகப் பணியாளர்களும் அளப்பரிய தியாகம் செய்துள்ளனர். ஏற்கெனவே இந்தத் திட்டத்தை நான் ஏப்ரல் 1}ஆம் தேதி அறிவித்தபோது, இத்திட்டத்தை மேலும் நீட்டிப்பதற்கான சாத்தியக் கூறுகளை ஆராய்வதாக தெரிவித்திருந்தேன். அதன்படி, இன்று தேசிய சுகாதார சேவை ஆதரவு ஊழியர்களுக்கும், சமூக பணியாளர்களுக்கும் இத்திட்டத்தை விரிவுபடுத்தியிருக்கிறோம்” என்றார்.

பிரிட்டன் அரசின் இந்த முடிவுக்கு வரவேற்பு தெரிவித்துள்ள தொழிலாளர் நல அமைப்பின் யெவட்டே கூப்பர், இது மிகவும் நல்ல செய்தி. இதே கோரிக்கையை முன்வைத்து எங்கள் கமிட்டி கடந்த ஒருவாரமாக அரசுக்கு அழுத்தம் கொடுத்து வந்தது. பிரிட்டனில் கரோனா போரில் உயிரிழந்த முன்களப் பணியாளர்களின் குடும்ப உறுப்பினர்களை வெளியேறச் சொல்வது கற்பனைக்கு எட்டாதது” என்றார்.
மேலும், இலவச விசா நீட்டிப்பு திட்டத்தையும் இவர்களுக்கு விரிவுபடுத்த வேண்டுமென அவர் கோரிக்கை விடுத்தார்.

Add your comment

Your email address will not be published.

twenty + 16 =