in

தீபாவளி பண்டிகைக்கு திரையரங்குகளில் ரிலீஸ் சிவகார்த்திகேயனின் அயலான் #ayalaan release date..

தீபாவளி பண்டிகைக்கு திரையரங்குகளில் ரிலீஸ்
சிவகார்த்திகேயனின் அயலான்
ரவிக்குமார் இயக்கத்தில் சிவகார்த்திகேயன் நடிப்பில் பிரம்மாண்டமாக உருவாகி இருக்கும் பான் இந்தியா படமான அயலான் படத்தின் ரிலீஸ் தேதி அறிவிக்கப்பட்டு உள்ளது.
மாவீரன் திரைப்படத்தில் நடிகர் சிவகார்த்திகேயனுக்கு ஜோடியாக இயக்குனர் ஷங்கரின் மகள் அதிதி நடிக்க, வில்லனாக மிஷ்கின் நடித்துள்ளார். மாவீரன் திரைப்படத்தின் ரிலீஸ் தேதியும் அண்மையில் அறிவிக்கப்பட்டது. அதன்படி இப்படம் வருகிற ஆகஸ்ட் மாதம் 11-ந் தேதி ரிலீஸ் ஆகும் என அதிகாரப்பூர்வமாக அறிவித்து இருந்தனர்.இந்நிலையில், சிவகார்த்திகேயன் நடிப்பில் உருவாகி உள்ள பேண்டஸி திரைப்படமான அயலான் படத்தின் ரிலீஸ் தேதியையும் படக்குழு அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது. அதன்படி அயலான் திரைப்படம் வருகிற நவம்பர் மாதம் தீபாவளி பண்டிகைக்கு திரையரங்குகளில் ரிலீஸ் ஆகும் என அறிவித்துள்ளனர். இதற்காக ஸ்பெஷல் போஸ்டர் ஒன்றையும் வெளியிட்டு உள்ளனர். அதில் ஏலியன் உடன் சிவகார்த்திகேயன் பறந்து செல்வது போல் புகைப்படமும் இடம்பெற்று உள்ளது.
அயலான் திரைப்படத்தை ரவிக்குமார் இயக்கி உள்ளார். இப்படத்தில் சிவகார்த்திகேயனுக்கு ஜோடியாக ரகுல் ப்ரீத் சிங் நடித்துள்ளார். மேலும் யோகிபாபு, கருணாகரன் ஆகியோரும் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ள இப்படத்திற்கு ஏ.ஆர்.ரகுமான் இசையமைத்து உள்ளார். கடந்த 2017-ம் ஆண்டு தொடங்கப்பட்ட இப்படம் சுமார் 6 ஆண்டு இடைவெளிக்கு பின் ரிலீஸ் ஆக உள்ளதால் ரசிகர்கள் உற்சாகம் அடைந்துள்ளனர். பான் இந்தியா படமாக ரிலீஸ் ஆக உள்ள இப்படத்தில் 4500-க்கும் மேற்பட்ட வி.எஃப்.எக்ஸ் காட்சிகள் இடம்பெற்று உள்ளது குறிப்பிடத்தக்கது.

What do you think?

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

GIPHY App Key not set. Please check settings

ஐசியூ வில் நடிகர் சரத்பாபு கவலைக்கிடம் | Actor Sarathbabu is serious in ICU

அப்படியே நடிச்சிட்டேன்…. லிப்லாக் சீனெல்லாம்!!!!! ஒரு மேட்டர் ஆ …அமலா பால் பளீச்