in ,

தில்லை நடராஜர் சிவகாமசுந்தரி அம்மன் ஆலயத்தில் ஐப்பசி பூர உற்சவம் கொடியேற்றம்


Watch – YouTube Click

தில்லை நடராஜர் சிவகாமசுந்தரி அம்மன் ஆலயத்தில் ஐப்பசி பூர உற்சவம் கொடியேற்றம்

 

நடராஜர் கோயில் வளாகத்தில் சிறப்பாக அமைந்திருக்கும் சிவகாமக்கோட்டம் என்று அழைக்கப்படும் ஸ்ரீ சிவகாமசுந்தரி அம்மன் ஆலயத்தில் ஐப்பசி பூர உற்சவம் இன்று கொடியேற்றத்துடன் தொடங்கியது.

நாளை முதல் இரண்டு வேலைகளிலும் நான்கு வீதிகளிலும் சிவகாமசுந்தரி அம்மன் புறப்பாடு நடைபெறும்.

வருகிற செவ்வாய்க்கிழமை திருத்தேர் உற்சவம் அதனை தொடர்ந்து மறு தினம் பூரச்சலங்கை உற்சவமும் சிதம்பரம் நடராஜர் தாமிர சபை அருகே சோமாஸ்கந்தர் சிவானந்த நாயகி திருக்கல்யாண மகோற்சவம் நடைபெறும்.

உள்நாடு, வெளிநாட்டிலிருந்தும் பக்தர்கள் திருக்கல்யாணத்தை கண்டு மகிழ்வார்கள்.

ஏராளமான பக்தர்கள் தங்களுக்கு திருமணம் நடக்க வேண்டியும், திருமணத்திற்கு தேவையான தாலி பட்டு வேட்டி, பட்டுப்புடவை, ஆகியவற்றை அம்பாளுக்கு செலுத்தி தங்களது திருமண வைபவங்களை வேண்டிக்கொண்டு மிகச் சிறப்பாக பக்தியுடன் வேண்டி படைப்பார்கள்.


Watch – YouTube Click

What do you think?

சோதனையில் 120 கிலோ கஞ்சா பறிமுதல் நான்கு நபர்கள் கைது

முதலமைச்சர் கட்டளை விக்ரமன் வீட்டில் குவிந்த மருத்துவர்கள்..