திருவண்ணாமலை உணவு பாதுகாப்பு துறை அதிகாரிகள் அனைத்து உணவகங்கள் மற்றும் டீக்கடை உள்ளிட்ட இடங்களில் அதிரடி ஆய்வுகளை மேற்கொண்டு வந்தார்கள்.
இன்னும் சில தினங்களில் தீபாவளி மற்றும் திருக்கார்த்திகை தீப திருவிழா வருவதால் திருக்கார்த்திகை தீபத் திருவிழாவிற்கு லட்சக்கணக்கான பக்தர்கள் திருவண்ணாமலைக்கு வருவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது
இந்நிலையில் திருவண்ணாமலைக்கு வரும் பக்தர்கள் உணவகங்கள் மற்றும் டீக்கடை ஆகிய இடங்களில் உணவுகளையும் டீக்கடைகளில் தேநீரையும் உட்கொள்கிறார்கள் இந்நிலையில் உணவு பாதுகாப்பு துறை சார்பாக அனைத்து உணவுகளிலும் உணவு பாதுகாப்பு துறையினர் அதிரடியாக ஆய்வு செய்து வருகின்றார்கள் சுகாதாரம் மற்றும் உணவு பாதுகாப்பு துறையின் உடைய சான்றிதழ் உணவு தயாரிக்கப்படும் இடத்தில் சுத்தமாக இருக்கிறதா அனைவரும் தலைக்கவசம் போட வேண்டும் கை கிளவுஸ் போட வேண்டும் முந்தைய நாள் உணவு மீண்டும் பயன்படுத்தக் கூடாது ப்ரீசரில் வைத்திருந்த தரமற்ற உணவுப் பொருள்களை அதிரடியாக அகற்றினார்கள் இதுபோல் ஒரு சிலர் குளிர்பானங்களில் தேதி எதுவும் இல்லாமல் உணவகங்களை தயாரிப்பதால் அந்த குளிர்பானங்களை குப்பையில் கொட்டி அழித்தார்கள் தினசரி நாளிதழ்களில் சப்பாத்தி மாவு வைத்திருந்ததை குப்பையில் கொட்டி அழித்த நிலையில் அதிரடி நடவடிக்கை எடுத்து வழக்கு பதிவு செய்தார்கள்
மாவட்ட நியமன அலுவலர் டாக்டர் ராமகிருஷ்ணன் உத்தரவின் பெயரில் உணவு பாதுகாப்பு துறை அதிகாரிகள் எழில், இளங்கோவன், சேகர் ,சுப்பிரமணி, உள்ளிட்ட உணவு பாதுகாப்பு அலுவலர்கள் இந்த ஆய்வுப் பணியினை மேற்கொண்டு வழக்கு பதிவு செய்தார்கள்.