in

திருக்கார்த்திகை தீபத் திருவிழா, எல்லை பிடாரி அம்மன் உற்சவம்


Watch – YouTube Click

திருக்கார்த்திகை தீபத் திருவிழாவையொட்டிகோவிலின் காவல் தெய்வமான பிடாரி அம்மன் உற்சவம்

சிம்ம வாகனத்தில் மாட வீதியில் பவனி வந்து பக்தர்களுக்கு அருள் பாலித்த பிடாரி அம்மன்

பஞ்சபூத ஸ்தலங்களில் அக்னி ஸ்தலமாகவும், நினைத்தாலே முக்தி தரும் திருவண்ணாமலைஅண்ணாமலையார் திருக்கோவில் திருக்கார்த்திகைதீபத் திருவிழா வருகிற 17 ம் தேதி கொடியேற்றத்துடன்தொடங்கி 10 நாட்கள் வெகு விமர்சையாக நடைபெறஉள்ளது.

இந்த தீபத் திருவிழாவையொட்டி கோவிலின் 3 ஆம் பிரகாரத்தில் அமைந்துள்ள திருக்கோவிலின் காவல் தெய்வமாக விளங்கும் பிடாரி அம்மன் உற்சவம் விமர்சையாக நடைபெற்றது.

முன்னதாக உற்சவர் மற்றும் மூலவர் பிடாரி அம்மனுக்கு பல்வேறு வாசனை திரவியங்களை கொண்டு சிறப்பு அபிஷேகங்கள் செய்யப்பட்டு மகா கற்பூர ஆரத்தி காண்பிக்கப்பட்டது.

தொடர்ந்து உற்சவர் பிடாரி அம்மன் கோவில் ஊழியர்களால் தோளில் சுமந்தவாறு மூன்றாம் பிரகாரத்தில் அமைந்துள்ள பிடாரியம்மன் மூலவர் சன்னதிக்கு கொண்டுவரப்பட்டு சிறப்பு தீபாராதனையும் நடைபெற்றது.

அதனைத் தொடர்ந்து திருக்கோவிலில் ஊர்வலமாக வந்த பிடாரியம்மன் ராஜகோபுரம் அருகே 16 கால் மண்டபத்தில் சிம்ம வாகனத்தில் எழுந்தருளி பக்தர்களுக்கு காட்சியளித்தார்.

தொடர்ந்து பிடாரி அம்மன் மாட வீதியில் வலம் வந்து பக்தர்களுக்கு காட்சியளித்தார். மாட வீதியில் வலம் வந்த பிடாரி அம்மனை ஏராளமான பக்தர்கள் வழிநெடுக சாமி தரிசனம் செய்தனர்.


Watch – YouTube Click

What do you think?

என்னால குருடா , முட்டாளா இருக்க முடியாது .. என்னை வெளியே அனுப்புங்க பிக்பாஸ் .. தனிமையில் அழும் விசித்ரா

மிரட்டும் மிதிலி புயல் புதுச்சேரி, காரைக்காலில் பலத்த மழைக்கு வாய்ப்பு