in

தியாகராஜர் ஆலயத்தில் ஜென்மாஷ்டமி முன்னிட்டு அஷ்ட பைரவருக்கு மகா சண்டி யாகம்


Watch – YouTube Click

நாகை அருகே திருவாய்மூர் தியாகராஜர் ஆலயத்தில் ஜென்மாஷ்டமி முன்னிட்டு அஷ்ட பைரவருக்கு மகா சண்டி யாகம்

நாகப்பட்டினம் மாவட்டம் திருக்குவளை அருகே திருவாய்மூரில் சப்தவிடங்கர் தலங்களில் ஒன்றாக தியாகராஜர் கோயில் அமைந்துள்ளது. இவ்வாலயம் தேவாரப் பாடல்கள் இடம்பெற்ற சிவபெருமானின் 274 சிவாலயங்களில் இது 188-வது ஆலயமாகும்.

மேலும் தேவாரப் பாடல்கள் பெற்ற காவிரி தென்கரை தலங்களில் இது 124-வது தலமாக விளங்குகிறது. காசியைப் போல இந்த ஆலயத்திலும் அஷ்ட பைரவர்கள் எனப்படும் எட்டு பைரவர்கள் தரிசனம் தருகின்றனர். அஷ்ட பைரவர்களுக்கு தனி சன்னதி உள்ளது அவர்களை வழிபட்டால் பயம் விலகும். திரியம்பகாஷ்டமி நாளில் சிவன் முப்புரம் எரித்ததாக கருதப்படுகிறது. அந்த நாளில் இவர்களை வழிபடுவது கூடுதல் சிறப்பு. ஆலயத்தில் ஆனந்த பைரவர், அகோர பைரவர், உத்தண்ட பைரவர், பால பைரவர், பாதாள பைரவர், ஈஸ்வர பைரவர், கால பைரவர், ஈசான பைரவர் ஆகிய அஷ்ட பைரவர்கள் அமைந்துள்ளனர். இதில் நான்கு பைரவர்கள் சிலை வடிவமாகவும், மேலும் நான்கு பைரவர்கள் தண்டங்களின் வடிவில் பைரவரின் அம்சமாகவும் இங்கே வீற்றிருக்கின்றனர்.

ஆலயத்தில் மாதம் தோறும் வரும் தேய்பிறை அஷ்டமிக்கு அஷ்ட பைரவருக்கு சிறப்பு யாகம் அபிஷேகம் நடைபெறும் கார்த்திகை மாதத்தில் வரும் தேய்பிறை அஷ்டமி ஜென்மாஷ்டமி என்றழைக்கபடும் விஷேச ஜென்மாஷ்டமியை முன்னிட்டு திருவாய்மூர் அஷ்ட பைரவருக்கு 13அடிக்கு 13 அடி பிரம்மாண்ட யாக குண்டம் உருவாக்கப்பட்டு மகா சண்டி ஷோமம் நடைபெற்றது. இதிலஅ 108 வகையான மூலிகை திரவியங்களாலும், ஆல், அரசு, புரசு, வன்னி, நாயுருவி, வெள்ளெருக்கு உள்ளிட்ட மரப்பொருட்களும், 9 வகையான நவதானியங்கள், பழவர்க்கம் முதலியவற்றைக் கொண்டு மஹா யாகம் நடைப்பெற்றது. மகா பூர்ணாகதி நடைபெற்றது. அதனைத் தொடர்ந்து அஷ்ட பைரவருக்கு. பால். பன்னீர். இளநீர். விபூதி. குங்குமம். சந்தனம்.

தேன். மஞ்சள் என மங்கள பொருட்களால் அபிஷேகம் செய்யப்பட்டது தொடர்ந்து யாகத்தில் வைக்கப்பட்ட புனித நீர் கலசங்களை சிவாச்சாரியர்கள் சுமந்து மங்கல வாத்தியங்கள் மற்றும் சிவ வாத்தியங்கள் முழங்க ஆலயத்தை வலம் வந்து அஷ்ட பைரவருக்கு கலச நீர் அபிஷேகம் நடைபெற்றது. தொடர்ந்து அஷ்ட பைரவருக்கு வண்ண மலர்களால் அலங்காரம் செய்யப்பட்டு மகாதீபாரதனை காண்பிக்கப்பட்டது இதில் சுற்று வட்டார பகுதியில் சேர்ந்த திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.


Watch – YouTube Click

What do you think?

விழுப்புரம் மாவட்டம் திண்டிவனத்தில் கோலி சோடா 2 பட நடிகர் வில்லன் பள்ளி குழந்தைகளுக்கு கல்வி உபகரணங்கள் வழங்கினார்.

சசிவர்னேஸ்வரர் கோவிலில் மகா பைரவாஷ்டமி சிறப்பு ஹோம்