திமுகவில் முதல்வர் வேட்பாளர் யார்?- பாஜக மாநில தலைவர் முருகன் கேள்வி | bjp murugan

bjp-murugan

நாகர்கோவில்:

பாஜக மாநில தலைவர் எல்.முருகன் நாகர்கோவிலில் செய்தியாளர்களிடம் அவர் கூறியதாவது: முதல்வர் வேட்பாளர் ஸ்டாலினா? கனிமொழியா? அல்லது உதயநிதியா? என்று சொல்ல முடியாத நிலையில் திமுக உள்ளது. கடந்த திமுக ஆட்சியில் அக்கட்சி நிர்வாகிகளால் அபகரிக்கப்பட்ட நிலங்களை மீட்பதற்காகவே மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதா தனிப் பிரிவை உருவாக்கினார்.

மின்தடை, விவசாயிகள் பிரச்சினை போன்றவற்றால் மக்கள் எவ்வளவு பாதிக்கப்பட்டனர் என அனைவருக்கும் தெரியும். இதனால் வரும் தேர்தலில் திமுக தோற்கடிக்கப்படுவது உறுதி. பெண் உரிமை பற்றி பேசும் திமுகவில், அந்த கட்சியின் பெண் நிர்வாகி பூங்கோதை ஆலடி அருணாவுக்கே பாதுகாப்பு இல்லாத நிலை உள்ளது.

மதுரையில் நடந்த பாஜக நிகழ்ச்சியில் விஷமிகள் ஊடுருவி குழப்பத்தை ஏற்படுத்த முயற்சித்தனர். அமைதிக்கு குந்தகம் ஏற்படுத்தும் வகையில் நடந்துகொண்டவர்கள் மீது தமிழக அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும். கன்னியாகுமரி நாடாளுமன்ற தொகுதிக்கு எப்போது இடைத்தேர்தல் அறிவிக்கப்பட்டாலும், அதனை சந்திக்க பாஜக தயாராக உள்ளது. பாஜகவின் வெற்றி நிர்ணயிக்கப்பட்டது என்றார்.

நன்றி இந்து தமிழ் திசை