in

தளபதிக்கு நெருக்கடி கொடுக்கும் லோகேஷ் | Lokesh gives pressure to Vijay

தளபதிக்கு நெருக்கடி கொடுக்கும் லோகேஷ்
நடிகர் விஜய் தற்போது இயக்குனர் லோகேஷ் கனகராஜ் உடன் இணைந்து லியோ படத்தில் பணியாற்றி வருகிறார். மாஸ்டர் பட வெற்றியை தொடர்ந்து இவர்கள் இருவரும் இந்த படத்தில் இணைந்திருக்கிறார்கள்.
வரும் அக்டோபரில் ரிலீஸ் ஆக இருக்கும் லியோ படத்தின் முதற்கட்ட படப்பிடிப்பானது சென்னையில் நடைபெற்றது. அதைத் தொடர்ந்து மொத்த பட குழுவும் ஜம்மு காஷ்மீரில் படப்பிடிப்பை நடத்துவதற்காக சென்றனர். காஷ்மீரின் கடுங்குளிரில் அவதிப்பட்டு தான் லியோ படக்குழு சென்னை திரும்பியது. இதனை கருத்தில் கொண்டு தளபதி விஜய் இனி அவுட்டோர் ஷூட்டிங் வேண்டவே வேண்டாம் மொத்த காட்சிகளையும் சென்னையிலேயே செட் போட்டு எடுத்து விடுங்கள் என்று லோகேஷ் கனகராஜ் இடம் கண்டிஷன் ஆக சொல்லி இருந்தார். லோகேஷும் தளபதியின் வார்த்தைக்கு சரி என்று சொல்லி சென்னையில் படப்பிடிப்பை தொடங்கினார். சென்னை பிரசாத் ஸ்டூடியோவில் செட் போடப்பட்டு சண்டை காட்சிகள் எடுக்கப்பட்டது. ஆனால் இயக்குனர் லோகேஷ் கனகராஜுக்கு காட்சிகளில் திருப்தி ஏற்படவில்லையாம். இவரைப் பொறுத்த வரைக்கும் தான் நினைத்தது போலவே காட்சிகள் அமைய வேண்டும் என்பதில் ரொம்பவும் உறுதியாக இருப்பவர். இதனால் விஜய்யிடம் சென்று தனக்கு திருப்தி இல்லை என்பதை தெரிவித்து அவுட்டோர் ஷூட்டிங் பண்ண அனுமதி கேட்டு இருக்கிறார். விஜய்யும் என்ன சொல்வது என்று தெரியாமல் சரி என்று ஒத்துக் கொண்டாராம். தற்போது சண்டை காட்சிகள் அத்தனையும் பையனூரில் கொளுத்தும் வெயிலில் பரபரப்பாக நடந்து கொண்டிருக்கிறது. ஏற்கனவே குளிரில் வாட்டி வதைத்த லோகேஷ் கனகராஜ் இப்போது அடிக்கும் வெயிலில் தளபதியை போட்டு பாடாய்ப்படுத்திக் கொண்டிருக்கிறார்.
விஜய்க்கு ஏற்கனவே பீஸ்ட் மற்றும் வாரிசு திரைப்படங்கள் சறுக்கி விட்டதால் அவருடைய பெரிய நம்பிக்கையே லோகேஷ் கனகராஜ் தான். இதனால் என்ன செய்வது என்று தெரியாமல் இயக்குனர் இழுத்த இழுப்பிற்கு போய் கொண்டிருக்கிறார் தளபதி.

What do you think?

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

GIPHY App Key not set. Please check settings

விஜய் ஸ்டைலில் விருந்து வைத்து அமர்க்களபடுத்திய சிம்பு | Simbu threw a party in Vijay style

இன்னும் ஏகே 62 பிரச்னையே முடியல… அதற்குள் ஏகே 63 படத்தின் இயக்குனரை முடிவு செய்த அஜித்