தனிமைப்படுத்திக் கொண்டார், கேம்பிரிட்ஜ் கோமகள்

கேம்பிரிட்ஜ் கோமகளும், கோமகன் வில்லியமின் மனைவியுமான கேத்தரீன், கோவிட் தொற்று பாதித்த நபருடன் தொடர்பில் இருந்ததால், தன்னை தனிமைப்படுத்திக் கொண்டிருக்கிறார். அவருக்கு கோவிட் அறிகுறி இல்லாத போதிலும், அரசின் வழிகாட்டு நெறிமுறைக்கு உட்பட்டு, 10 நாள்கள் தனிமைப்படுத்திக் கொண்டுள்ளார். தேசிய சுகாதார துறையின் 73ஆம் ஆண்டு விழாவை முன்னிட்டு மருத்துவ பணியாளர்கள் மத்தியில் இன்று உரையாற்றுவதாக இருந்த நிலையில், அவர் திடீரென தன்னை தனிமைப்படுத்திக் கொண்டது பணியாளர்களுக்கு ஏமாற்றத்தை அளித்தது.

Add your comment

Your email address will not be published.

nineteen − eight =