தங்கலான் படப்பிடிப்பில் நடிகர் விக்ரமுக்கு விபத்து…
தங்கலான் படத்தின் படப்பிடிப்பின் போது ஏற்பட்ட எதிர்பாரா விபத்தில் சிக்கிய நடிகர் விக்ரமுக்கு விலா எலும்பு முறிந்தது. தமிழ் திரையுலகில் முன்னணி நடிகராக வலம் வருபவர் விக்ரம். சினிமாவுக்காக தன் உடலை வறுத்திக்கொண்டு நடிக்கும் நடிகர்களில் விக்ரமும் ஒருவர்.. அவரின் நடிப்புக்கு தீணி போடும் வகையில் மணிரத்னத்தின் பொன்னியின் செல்வன் திரைப்படம் அமைந்திருந்தது. இதில் ஆதித்த கரிகாலனாக நடித்திருந்தார் என்று சொல்வதை விட வாழ்ந்திருந்தார் என்று தான் சொல்ல வேண்டும் அந்த அளவுக்கு மிரட்டலான நடிப்பை வெளிப்படுத்தி இருந்தார். தங்கலான் படத்திற்காகவும் நடிகர் விக்ரம் உடல் எடையை குறைத்து மிகவும் ரிஸ்க் எடுத்து நடித்து வருகிறார். இப்படத்தில் விக்ரம் உடன் பார்வதி, மாளவிகா மோகனன், பசுபதி என மிகப்பெரிய நட்சத்திர பட்டாளமே நடிக்கிறது. வரலாற்று கதையம்சம் கொண்ட இப்படத்தின் படப்பிடிப்பு இறுதிக்கட்டத்தை எட்டி உள்ளது. இதன் இறுதிக்கட்ட ஷூட்டிங் சென்னையில் உள்ள ஈவிபி பிலிம் சிட்டியில் நேற்று தொடங்கி நடைபெற்று வந்தது. இதில் நடிகர் விக்ரமும் கலந்துகொண்டார். நேற்று ஷூட்டிங் தொடங்கும் முன் நடைபெற்ற ஒத்திகையின்போது நடிகர் விக்ரம் எதிர்பாராத விதமாக கீழே விழுந்ததில், அவரது விலா எலும்பு முறிந்தது. இதையடுத்து பதறிப்போன படக்குழுவினர் அவரை மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அவரை பரிசோதித்த மருத்துவர்கள், அவரை ஓய்வெடுக்க அறிவுறுத்தி உள்ளார்களாம்.
GIPHY App Key not set. Please check settings