வாஷிங்டன்: கேபிடல் ஹில் வன்முறை குறித்த விமர்சனங்களுக்குப் பிறகும் டொனால்ட் டிரம்ப் அமைதியாக இருந்தாலும், புதிதாக தேர்ந்தெடுக்கப்பட்ட ஜோ பிடன் பதவியேற்பு விழாவின் போது டிரம்ப் ஆதரவாளர்கள் வன்முறையை பரப்பலாம் என்று பெடரல் பீரோ ஆஃப் இன்வெஸ்டிகேஷன் (FBI) எச்சரித்துள்ளது. இத அடுத்து பாதுகாப்பை வலுப்படுத்த சிறப்பு பாதுகாப்பு குழு வாஷிங்டனுக்கு அனுப்பப்பட்டுள்ளது. ஜோ பிடென் (Joe Biden) ஜனவரி 20 ஆம் தேதி அமெரிக்காவின் புதிய ஜனாதிபதியாக பதவியேற்க உள்ளார்.
கேபிடல் ஹில் வன்முறையைத் தொடர்ந்து, பதவியேற்பு விழாவை சீர்குலைக்க டிரம்ப் (Donald-Trump) ஆதரவாளர்கள் வன்முறையை பரப்பக்கூடும் என்ற அச்சம் அதிகரித்துள்ளது. வழக்கமாக லட்சக்கணக்கானவர்கள் பதவி ஏற்பு விழாவில் கூடுவார்கள் ஆனால் இந்த முறை கொரோனா தொற்றுநோய் காரணமாக விழாவிற்கு வரும் மக்களின் எண்ணிக்கை மிகக் குறைவாக இருக்கும். கலகக்காரர்களைக் கையாளும் திறன் கொண்ட சிறப்புக் குழு ஜோர்ஜியாவில் பணியில் நிறுத்தப்பட்டுள்ளது. தலைநகர் வாஷிங்டன் டி.சி தவிர அனைத்து மாநில அரசாங்கங்களையும் எச்சரித்து, பாதுகாப்புக்கு தேவையான நடவடிக்கைகளை எடுக்குமாறு கேட்டுக் FBI கொண்டுள்ளது. வன்முறைக்கான வாய்ப்புகள் அதிகம் உள்ள ஜனவரி 17 முதல் 20 வரை வாஷிங்டனின் சில பகுதிகளுக்கு சீல் வைக்க புலனாய்வு அமைப்புகளும் தயாராகி வருகின்றன.
டிரம்ப் ஆதரவாளர்கள் வன்முறையை பரப்பக்கூடும் என்று ஜனவரி 8 ஆம் தேதி FBI-க்கு தகவல் கிடைத்தது. இதைக் கருத்தில் கொண்டு, ஜோ பிடனின் பாதுகாப்பு அதிகரிக்கப்பட்டுள்ளது. டொனால்ட் டிரம்ப் ஆதரவாளர்கள் துணை அதிபராக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ள கமலா ஹாரிஸ் (Kamala Harris) மற்றும் பிரதிநிதிகள் சபையின் சபாநாயகர் நான்சி பெலோசி ஆகியோரையும் தாக்குவார்கள் என்றும் அச்சம் நிலவுவதால், அவர்களுக்கான பாதுகாப்ப்பும் அதிகரிக்கப்பட்டுள்ளது. சந்தேகத்திற்கிடமான சிலரை FBI கண்காணித்து வருகிறது. அதன் அடிப்படையில் சிலரை ஜனவரி 20 க்கு முன்னர் கைது செய்யலாம் எனவும் கூறப்படுகிறது.