டிஎன்பிஎஸ்சி மூலம் 30 ஆயிரம் காலிப்பணியிடங்களை நிரப்பவும் சீமான்
தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணயத்தின் குரூப்}4 தேர்வு மூலம் ஆண்டுக்கு 30 ஆயிரம் காலிப்பணியிடங்கள் நிரப்ப வேண்டும் என நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் தெரிவித்துள்ளார்.
அரசுத் துறைகளில் மூன்றரை லட்சத்துக்கும் மேல் காலிப்பணியிங்கள் உள்ள நிலையில் ஆண்டுக்கு வெறும் 10,000 காலிப்பணியிடங்கள் மட்டுமே குரூப்}4 தேர்வு மூலம் நிரப்புவது கண்டனத்துக்குரியது. அதிமுக அரசு 2018, 2019 ஆண்டுகளில் சராசரியாக 10,000 பணியிடங்கள் நிரப்பி வந்தது.
கொரோனா தொற்று காலத்தில் 2020, 2021 என இரு வருடம் எந்த அரசுத்தேர்வும் நடைபெறவில்லை. கடந்த 3 ஆண்டுகளில் ஓய்வு பெற்றவர்களின் எண்ணிக்கையும் அதிகரித்துள்ளது. மேலும், கரோனா காலத்தில் பலர் வேலை இழந்ததால் அவர்கள் அரசு பணியில் சேர முயன்று வருகின்றனர். இதனால் போட்டித் தேர்வர்களின் எண்ணிக்கை பல மடங்கு அதிகரித்துள்ளது.
இதனால் அரசு இயந்திரம் முடங்கி மக்கள் சேவை பாதிக்கப்படுவது மட்டுமின்றி, அரசு வேலைக்காக காத்திருக்கும் லட்சக்கணக்கான இளைஞர்களின் எதிர்காலமும் பாதிக்கப்படும்.
இதனால், பல்வேறு துறைகளில் காலியாக உள்ள மூன்றரை லட்சம் காலிப்பணியிடங்களை நிரப்பும் வகையில் ஆண்டுக்கு சராசரியாக 30,000 பணியிடங்களுக்கு தேர்வு நடத்த வேண்டும். அரசு பணியாளர்களின் ஓய்வு பெறும் வயதை 60}லிருந்து 58 ஆக குறைக்க வேண்டும் எனத் தெரிவித்துள்ளார்.
GIPHY App Key not set. Please check settings