டாக்டர் பட்டம் பெற்றுள்ள பிரபல பின்னணி பாடகர் மனோ |Mano a playback singer who holds Doctrate
டாக்டர் பட்டம் பெற்றுள்ள பிரபல பின்னணி பாடகர் மனோவுக்கு சமூக வலைதளங்களில் வாழ்த்துக்கள் குவிந்த வண்ணம் உள்ளன. பாடகர், நடிகர், டப்பிங் கலைஞர், தொகுப்பாளர் என பன்முகத்திறமை கொண்டவராக விளங்கியவர் மனோ. 80ஸ் மற்றும் 90ஸ் காலகட்டங்களில் இவர் பாடாத படங்களே இல்லை என சொல்லும் அளவுக்கு செம பிசியான பாடகராக வலம் வந்தார் மனோ இவர் தமிழ், தெலுங்கு, கன்னடம், மலையாளம், இந்தி, துலு, அசாமிஸ் என பல்வேறு மொழிகளில் 25 ஆயிரத்திற்கும் மேற்பட்ட பாடல்களை பாடி அசத்தியிருக்கிறார். இளையராஜா இசையில் மட்டும் 500க்கும் மேற்பட்ட பாடல்களை பாடியுள்ளார். இசைத்துறையில் 38 ஆண்டுகளில் 15 மொழிகளில் 25 ஆயிரம் பாடல்களை பாடி அசத்திய மனோவுக்கு தற்போது டாக்டர் பட்டம் வழங்கப்பட்டுள்ளது. ரிச் மான்ட் கேப்ரியல் பல்கலைக்கழகம் பாடகர் மனோவுக்கு டாக்டர் பட்டம் வழங்கி கவுரவித்துள்ளது
GIPHY App Key not set. Please check settings