in

‘ஜெயிலர்’ படப்பிடிப்பு நிறைவு கேக் கட் பண்ணி கொண்டாடிய சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த்!

‘ஜெயிலர்’ படப்பிடிப்பு நிறைவு கேக் கட் பண்ணி கொண்டாடிய சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த்!

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடித்து வந்த ‘ஜெயிலர்’ படத்தின் படப்பிடிப்பு நிறைவடைந்துள்ளதை அதிகாரப்பூர்வமாக புகைப்படம் வெளியிட்டு அறிவித்துள்ளது படக்குழு, இயக்குனர் நெல்சன் திலீப் குமார் இயக்கத்தில்,.சன் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரிப்பில், உருவாகி வரும் ‘ஜெயிலர்’ திரைப்படத்தில், ரஜினிகாந்த் முத்துவேல் பாண்டியன் என்கிற கதாபாத்திரத்தில் ஜெயிலர் வேடத்தில் நடித்து வருவதாக தகவல் வெளியானது. மேலும் இப்படத்தில் ரஜினிகாந்த் ஜோடியாக ரம்யா கிருஷ்ணன் நடித்து வருகிறார். முக்கிய கதாபாத்திரத்தில் தமன்னா, கன்னட சூப்பர் ஸ்டார் சிவராஜ் குமார், மலையாள சூப்பர் ஸ்டார் மோகன்லால், நடிகர் ஜாக்கி செரீப், சுனில் உள்ளிட்ட பலர் நடித்து வருகிறார்கள். இப்படத்திற்கு அனிருத் இசையமைக்கிறார்.
இந்த படத்தின் படப்பிடிப்பு பணிகள் விறுவிறுப்பாக நடந்து வந்த நிலையில், தற்போது சன் பிக்சர்ஸ் நிறுவனம் கடைசி நாளில் தலைவர் ரஜினிகாந்த்… நடிகை தமன்னா மற்றும் படக்குழுவினரோடு சேர்ந்து கேக் கட் பண்ணி படப்பிடிப்பை நிறைவு செய்ததை புகைப்படங்கள் வெளியிட்டு அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது. ‘ஜெயிலர்’ திரைப்படம் ஆகஸ்ட் 10ஆம் தேதி ரிலீசாக உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. படப்பிடிப்பு முடிவடைந்து விட்டதால், அடுத்து போஸ்ட் ப்ரடக்ஷன் பணிகளில் பட குழுவினர் தீவிர கவனம் செலுத்த உள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

What do you think?

சிவகார்த்திகேயனை கழட்டிவிட்ட லைகா! மாவீரன் ரிலீஸ் தாமதம்

விஜய் தேவரகொண்டாவுடன்…. வெளிநாட்டில் கும்மாளம் போடும் சமந்தா!