in

ஜெயம் ரவி நடித்ததால் தான் படம் பிளாப். தவறாக முடிவு எடுத்துவிட்டேன் | Jayam Ravi’s acting.

ஜெயம் ரவி நடித்ததால் தான் படம் பிளாப்..தவறாக முடிவு எடுத்துவிட்டேன்

ஜெயம் ரவிக்கு ஒவ்வொரு நாளும் ரசிகர்கள் அதிகரித்துக் கொண்டே தான் இருக்கிறார்களே தவிர இவரை வெறுப்பவர்கள் யாரும் இல்லை என்று சொல்லும் அளவிற்கு தன்னுடைய பேச்சாலும், நடிப்பாலும் ரசிகர்களின் மனதில் இடம் பிடித்து விட்டார். அப்படிப்பட்ட இவர் நடித்த ஒரு படம் ஃபெயிலியர் ஆனதால் இப்படத்தில் ஜெயம் ரவி நடித்ததால் தான் மொத்த சொதப்பலுக்கும் காரணம் என்று பழியை இவர் மேலே தூக்கிப்போட்டு விட்டார் இயக்குனர். ஜெயம் ரவி நடிப்பில் 2015 ஆம் ஆண்டு சகலகலா வல்லவன் திரைப்படம் வெளிவந்தது. இப்படத்தை இயக்கியவர் தான் இயக்குனர் சூரஜ். இதில் ஜெயம் ரவி, திரிஷா, அஞ்சலி, சூரி, விவேக் மற்றும் பலர் நடித்திருக்கிறார்கள்.இப்படத்தில் த்ரிஷா மற்றும் ஜெயம் ரவி ஒருவரை ஒருவர் பிடிக்காமல் திருமணம் செய்து கொண்டு எலியும் பூனையும் ஆக சண்டை போட்டுக்கொள்வார்கள் இதைப் பற்றி தற்போது இயக்குனர் அளித்த பேட்டியில் நான் இயக்கிய சகலகலா வல்லவன் படம் வெற்றி பெறாததற்கு ஜெயம் ரவி தான் காரணம் என்று கூறியிருக்கிறார்.அந்தப் படத்தில் நான் செய்த பெரிய தவறு அந்த கேரக்டருக்கு ஜெயம் ரவியை தேர்ந்தெடுத்தான். முதலில் இப்படத்தில் ஹீரோவாக நடிப்பதற்கு தனுஷ் தான் தேர்வு செய்யப்பட்டார். சில காரணங்களால் அவரால் நடிக்கமுடியவில்லை அதன்பின் ஜெயம் ரவியை நடிக்க வைத்து விட்டேன் என்று கூறியுள்ளார்.அத்துடன் அந்த கதாபாத்திரம் ஜெயம் ரவிக்கு கொஞ்சம் கூட பொருந்தவே இல்லை. அதனால் தான் அந்த படம் பிளாப் ஆனது மேலும் தனுஷ் மட்டும் இந்த கதாபாத்திரத்தில் நடித்திருந்தால் இப்படம் சூப்பர் ஹிட் ஆகியிருக்கும். நான் செய்த தவறால் பெரும் நஷ்டத்தை சந்தித்தேன் எனக்கு அது இப்ப வரை மன வேதனையை கொடுத்து வருகிறது என்று கூறியிருக்கிறார்.

What do you think?

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

GIPHY App Key not set. Please check settings

சந்திரமுகி படதின் காப்பியா? சன் டிவி சீரியலை கலாய்ககும் நெட்டிசன்கள் | A copy of Chandramukhi?

ஐஸ்வர்யா ராஜேஷ்க்கு ராஷ்மிகா மந்தனா கொடுத்த பதிலடி |RashmikaMandhana’s response to Aishwarya Rajesh