ஜவஹர்லால் நேருவின் நினைவு தினத்தையொட்டி அவரது சிலைக்கு காங்கிரஸ் சார்பிலும் மரியாதை செலுத்தப்பட்டது
ஜவஹர்லால் நேருவின் நினைவு தினத்தையொட்டி அவரது சிலைக்கு புதுச்சேரி அரசு சார்பிலும், காங்கிரஸ் கட்சி சார்பிலும் மரியாதை செலுத்தப்பட்டது
முன்னாள் பாரதப்பிரதமர் ஜவஹர்லால் நேரு நினைவு தினத்தையொட்டி கடற்கரை சாலையில் உள்ள அவரது சிலைக்கு புதுச்சேரி அரசு சார்பில் பொதுப்பணித்துறை அமைச்சர் லெட்சுமிநாராயணன் உள்ளிட்ட எம்.எல்.ஏக்கள் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார்கள்.
அதேபோல் காங்கிரஸ் கட்சி சார்பில் முன்னாள் முதலைமைச்சர் நாராயணசாமி தலைமையில் காங்கிரஸ் எம்.பி வைத்திலிங்கம், மாநில காங்கிரஸ் தலைவர் சுப்ரமணியம் உள்ளிட்ட காங்கிரஸ் நிர்வாகிகள் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார்கள்.
GIPHY App Key not set. Please check settings