in

சென்னை மழை நீரை வெளியேற்ற தயாராகும் விவசாய டிராக்டர்கள்.


Watch – YouTube Click

சென்னை மழை நீரை வெளியேற்ற தயாராகும் விவசாய டிராக்டர்கள்.

விழுப்புரம் மாவட்டம் செஞ்சியில் டிராக்டர் மூலம் நீரை வெளியேற்றும் கருவி பொருத்தும் பணி தீவிரப்படுத்தப்பட்டு வருகிறது.

வங்க கடலில் உருவாகியுள்ள மிக்ஜாம் புயலில் காரணமாக சென்னை,செங்கல்பட்டுகாஞ்சிபுரம் உள்ளிட்ட மாவட்டங்களில் கன மழை பொழிந்து வருகிறது.

கனமழையின் காரணமாக மழை நீரானது சென்னை குடியிருப்பு பகுதிகளிலும் சாலைகளிலும் அதிகளவு தேங்கி கடல் போல் காட்சி அளித்து வருவதால் பொதுமக்கள் பெரிதும் பாதிப்பு அடைந்துள்ளனர்.

இந்நிலையில் சென்னையில் பொழிந்து வரும் அதிக அளவு மழையின் காரணமாக ஏற்பட்டுள்ள வெள்ளப்பெருக்கை மாநகராட்சி ஊழியர்கள் மற்றும் பல்வேறு துறை சார்ந்த அதிகாரிகள் வடிகால் நீரை வெளியேற்றுவதில் இரவு பகலாக போராடிவருகின்றனர்.

குடியிருப்புகளில் தேங்கியுள்ள மழை நீரை வெளியேற்ற போதிய அளவு மின்மோட்டார் பயன்படுத்த முடியாத நிலையில் டிராக்டர்களின் மூலம் நீர் இறைக்கும் மோட்டார்கள் தே வை ஏற்பட்டுள்ளது. இதனால் விழுப்புரம் மாவட்டம்
செஞ்சியில் உள்ள இன்ஜினியரிங் கடைகளில் டிராக்டர் மூலம் நீர் வெளியேற்றம் கருவிகள் பொருத்தும் பணி தீவிரமாக நடைபெற்று வருகிறது திருவண்ணாமலை, காஞ்சிபுரம் கள்ளக்குறிஞ்சி,உள்ளிட்ட மாவட்டங்களை சேர்ந்த விவசாயிகள் தங்கள் டிராக்டர்களில் நீர் இறைக்கும் மோட்டார்களை பொருத்தும் பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.

விவசாயப் பணியில் ஈடுபடுத்தப்பட்ட டிராக்டர்களை தற்போது விவசாயிகள் சென்னைக்கு கொண்டு சென்று நீர் அதிகம் உள்ள பகுதிகளில் மாநகராட்சி ஒப்பந்த பணிக்கும் மற்றும் குடியிருப்புகளிலும் சாலைகளிலும் நீர் நிறைந்துள்ள பகுதிகளிலிருந்து நீரை வெளியேற்ற சென்னையை நோக்கி டிராக்டர்களை கொண்டு செல்கின்றனர்.

கடந்த இரண்டு வருடத்திற்கு முன்பு சென்னையில் ஏற்பட்ட மழை நிரை வெளியேற்றெ செஞ்சியிலிருந்தே டிராக்டர்கள்

சென்னை மாநகராட்சி முழுவதும் உள்ள மழை நீரை வெளியேற்ற பயன்படுத்தப்பட்டது குறிப்பிடத்தக்கது

மிக்ஜாம் புயலின் காரணமாக சென்னையில் மழை நீரில் தத்தளிக்கும் மக்களின் நன்மை கருதி விவசாயிகள் நீர் இறைக்கும் டிராக்டரை சென்னை நோக்கி தொடர்ந்து ஆர்வமுடன் விவசாயிகள் கொண்டு செல்கின்றனர்


Watch – YouTube Click

What do you think?

பாபர் மசூதி இடிப்பு தினத்தை முன்னிட்டு நெல்லை ரெயில் நிலையத்தில் போலீசார் சோதனை

திண்டிவனத்தில் முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதாவின் நினைவு நாள் ரெண்டாயிரத்து மேற்பட்டோருக்கு அன்னதானம்