in

செஞ்சி பேரூராட்சியில் 22ஆம் தேதி மக்களுடன் முதல்வர் முகாம் தொடக்கம் | CM camp started in gingee


Watch – YouTube Click

செஞ்சி பேரூராட்சியில் 22ஆம் தேதி மக்களுடன் முதல்வர் முகாம் தொடக்கம் | CM camp started in gingee

விழுப்புரம் மாவட்டம் செஞ்சி பேரூராட்சி மன்றத்தின் சாதாரண கூட்டம் மன்ற அரங்கில் நடைபெற்றது.

செஞ்சி பேரூராட்சி மன்ற தலைவர் மொக்தியார் அலி மஸ்தான் தலைமையில் பேரூராட்சி செயல் அலுவலர் செந்தில்குமார் முன்னிலையில் நடைபெற்ற மன்ற கூட்டத்தில் கடந்த ஜூலை மாதம் முதல் செப்டம்பர் மாதம் வரை நடந்த வரவு செலவு கணக்குகளுக்கு மன்ற ஒப்புதல் வழங்குதல்

செஞ்சி பேரூராட்சிக்கு உட்பட்ட பகுதிகளில் அவசர அவசியம் கருதி சாலைகள், வடிகால் வாய்க்கால்கள், கல்வெட்டுகள், மற்றும் அலுவலக கட்டிடம் ஆகிய பணிகள் ரூபாய் 61 லட்சத்தி 50 ஆயிரம் மதிப்பீட்டில் பணிகள் மேற்கொள்வதற்கு உள்ளிட்ட 50 தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

தொடர்ந்து கூட்டத்தில் பேசிய பேரூராட்சி மன்ற தலைவர் மொக்தியார் அலி மஸ்தான்

இந்தியாவிற்கே எடுத்துக்காட்டான கலைஞர் மகளிர் உரிமை தொகை திட்டதைகொண்டு வந்த தமிழ்நாடு முதலமைச்சருக்கும்,

தமிழ்நாட்டில் உள்ள பேரூராட்சிகளில் வருகின்ற 22ஆம் தேதி “மக்களுடன் முதல்வர்“முகாமை தொடங்கி வைத்து மக்களுடைய கோரிக்கைகளை நேரடியாக கேட்டறிந்து அவர்களுடைய கோரிக்கைகளை நிறைவேற்றும் வகையில் செஞ்சி பேரூராட்சியை தேர்வு செய்த தமிழ்நாடு முதலமைச்சருக்கு நன்றி தெரிவித்து தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.


Watch – YouTube Click

What do you think?

முசிறி ஐயப்பன் கோவிலில் கும்பாபிஷேக விழா நடைபெற்றது |Kumbabhishek ceremony at Musiri Ayyappan temple

ஜப்பான் படத்தால் தலையில் துண்டை போட்ட தயாரிப்பாளர்