in

செஞ்சி அருகே குடிபோதையில் சகோதரர்கள் இடையே தகராறு


Watch – YouTube Click

செஞ்சி அருகே குடிபோதையில் சகோதரர்கள் இடையே தகராறு-தம்பியை இரும்பு ராடால் அடித்து கொலை செய்த அண்ணன் கைது 

விழுப்புரம் மாவட்டம் செஞ்சி கிருஷ்ணாபுரம் வ.உ.சி.தெருவை சேர்ந்தவர் பாபு என்பவரின் மகன்கள் முருகன்,தாமோதரன்.

இந்நிலையில் கடந்த மூன்று ஆண்டுகளுக்கு முன்பு பாபு சாலை விபத்தில் உயிரிழந்து விட்டார். இவர் மின்சார துறையில் பணிபுரிந்து வந்ததால்,

இந்த நிலையில் அவரது பணியை அவரது இளய மகனான தாமோதரனுக்கு மின்சாரத் துறையில் கள உதவியாளராக பணி கிடைத்தது.
மின்துறை அலுவலகத்தில் பணிபுரிந்து முடிந்தவுடன் குடிபோதையில் எப்பொழுதும் வீட்டிற்கு வந்து அண்ணனிடம் தகராறு ஈடுபது வழக்கமாக இருந்து வந்துள்ள நிலையில்

நேற்று திங்கள் கிழமை இரவு அண்ணன் முருகன் (38) இருவருக்கும் குடும்பத் பிரச்சனை காரணமாக அடிக்கடி தகராறு ஏற்படுவது வழக்கம்.

மின் அலுவலகத்தில் மின்மாற்றி டிரான்ஸ்பார்மர் ஆப் செய்யும் இயந்திரத்தைக் கொண்டு அண்ணன் முருகனையும்,தாயையும் குடிபோதையில் தாக்கம் என்ற தாமோதரன் இதை தடுத்த முருகன் தாமோதரன் கையில் இருந்த  டிரான்ஸ்பார்ம் ஆப் செய்யும் இரும்பு ராடால் அவரது தம்பி மின் ஊழியர் தாமோதரனை பலமாக மண்டையில் தாக்கியுள்ளார்.

இதனால் சம்பவ இடத்திலேயே ரத்த வெள்ளத்தில் தாமோதரன் உயிரிழந்தார்.

இதனையடுத்து தகவல் அறிந்த செஞ்சி போலீசார் சம்பவ இடத்திற்கு சென்ற ரத்த வெள்ளத்தில் கிடந்த அவரை மீட்டு ஆம்புலன்ஸ் மூலம் உடற்கூறு ஆய்விற்காக முண்டியம்பாக்கம் அரசு மருத்துவகல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

இது குறித்து வழக்கு பதிவு செய்து தம்பியை கொலை செய்த அண்ணன் முருகனை கைது செய்து சிறையில் அடைத்தனர்.

மேலும் போலீஸ் விசாரணையில் தந்தை இறந்த இழப்புத் தொகையையும், தாய்க்கு வரும் தந்தையின் பென்ஷன் பணத்தையும்,தம்பி தாமோதரன் வாங்கும் சம்பள பணத்தையும் வீட்டில் தராமல் மது போதைக்கு அடிமையாகி தினம் தோறும் மது குடித்து விட்டு தினந்தோறும் தகராறு ஈடுபட்டு வந்ததும் மது போதையால்  குடும்ப தகராறில் ஈடுபட்டதம்பியை இரும்புராடால் அடித்து கொலை செய்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

மேலும் குடும்ப பிரச்சனையால் தம்பியை இரும்பு ராடால் அடித்து கொலை செய்த சம்பவம் செஞ்சி பகுதி மக்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.


Watch – YouTube Click

What do you think?

உச்சிஷ்ட கணபதி கோவில் சுவர்ண ஆகர்ஷண பைரவர் ஜெயந்தி விழா

ஸ்ரீ கோரக்க சித்தர் திருக்கோவிலில் பூஜை