சுதந்திரப் போராட்ட வீரர் வ உ சிதம்பரனாரின் 87 ஆவது நினைவு நாள்
சுதந்திரப் போராட்ட வீரர் வ உ சிதம்பரனாரின் 87 வது நினைவு நாளை முன்னிட்டு அவரது சிலைக்கு புதுச்சேரி முதலமைச்சர் ரங்கசாமி, மத்திய இணை அமைச்சர் எல்.முருகன் உட்பட அமைச்சர்கள் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார்கள்
கப்பலோட்டிய தமிழர் என்று அழைக்கப்படும் சுதந்திரப் போராட்ட வீரர் வ உ சிதம்பரனாரின் 87 ஆவது நினைவு நாள் புதுச்சேரி அரசு செய்தி மற்றும் விளம்பரத்துறை சார்பில் இன்று அனுசரிக்கப்பட்டது அதன்படி புதுவை சட்டசபை எதிரே பாரதி பூங்காவில் உள்ள வ உ சிதம்பரனாரின் சிலைக்கு முதலமைச்சர் ரங்கசாமி மாலை அணிவித்து மலர் தூவி மரியாதை செலுத்தினார் மேலும் இதில் மத்திய இணை அமைச்சர் எல்.முருகன், சபாநாயகர் செல்வம், அமைச்சர்கள் நமச்சிவாயம், லட்சுமி நாராயணன், சாய் ஜெ சரவணகுமார், பாராளுமன்ற உறுப்பினரும் பாஜக தலைவருமான செல்வகணபதி, சட்டமன்ற உறுப்பினர்கள் லட்சுமிகாந்தன், அசோக் பாபு, ராமலிங்கம், வெங்கடேசன் உட்பட பலர் கலந்துகொண்டு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர்
இதேபோல் காங்கிரஸ் கட்சி சார்பில் மாநிலத் தலைவர் எம் பி வைத்திலிங்கம் தலைமையில் முன்னாள் முதலமைச்சர் நாராயணசாமி உட்பட 50-க்கும் மேற்பட்ட காங்கிரஸ் நிர்வாகிகள் கலந்துகொண்டு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார்கள்