in

சீரியல் போல தான் இவர் நிஜ வாழ்க்கையிலும் நடக்கிறதாம் குமுறும் நடிகர் | Ranjith Priyaraman ….life

சீரியல் போல தான் இவர் நிஜ வாழ்க்கையிலும் நடக்கிறதாம் குமுறும் நடிகர்
இல்லத்தரசிகளை மட்டுமல்ல ஆண்களும் விரும்பி பார்க்கக் கூடிய சீரியல்தான் பாக்கியலட்சுமி. இந்த சீரியலில் 50 வயதான கோபி 4 பிள்ளைகள் தோளுக்கு மேல் வளர்ந்த பிறகு, தனது கல்லூரி காதலியை திருமணம் செய்து கொண்டு முதல் மனைவியை விவாகரத்து செய்து விட்டார். இந்த சீரியலில் நடந்தது போலவே நிஜ வாழ்க்கையிலும் 2வது திருமணம் செய்து கொண்ட பாக்கியலட்சுமி சீரியல் நடிகரின் இல்லற வாழ்க்கையை குறித்த பல சுவாரசியமான விஷயம் வெளிவந்துள்ளது. பாக்கியலட்சுமி சீரியலில் கோபியின் கதாபாத்திரம் தான் வலுவாக பேசப்படும். ஆனால் கடந்த சில நாட்களாக கோபியை டம்மியாக்கி விட்டு, புதிதாக சீரியலுக்கு என்ட்ரி கொடுத்த பிரபல நடிகர் ரஞ்சித்தின் பழனிச்சாமி என்ற கதாபாத்திரம் தான் முக்கியத்துவம் வாய்ந்ததாக உள்ளது. நடிகர் ரஞ்சித் மற்றும் நடிகை பிரியா ராமன் இருவரும் 2009 ஆம் ஆண்டு காதலித்து திருமணம் செய்து கொண்டனர். இவர்களுக்கு இரண்டு குழந்தைகள் உள்ளனர். ஆனால் இருவருக்கும் கருத்து வேறுபாடு ஏற்பட்டு 2014ல் விவாகரத்து செய்தனர். அதே வருடம் நடிகை ராகசுதா என்பவரை இரண்டாவது திருமணம் செய்து கொண்டார் ரஞ்சித். இவர்களின் பழக்கவழக்கத்தினால் தான் பிரியா ராமன் ரஞ்சித்தை விவாகரத்து செய்தார் என்று கூறப்படுகிறது. ரஞ்சித் இரண்டாவது திருமணம் செய்த ராகசுதா உடன் திருமண வாழ்க்கை பிடிக்காததால், 2015ல் விவாகரத்து செய்தார். அதன் பிறகு மூன்று வருடம் கழித்து 2018 முதல் மனைவியை மீண்டும் திருமணம் செய்து தனது இரண்டு குழந்தைகளுடன் மகிழ்ச்சியாக ரஞ்சித் வாழ்ந்து வருகிறார்

What do you think?

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

GIPHY App Key not set. Please check settings

இன்னும் ஏகே 62 பிரச்னையே முடியல… அதற்குள் ஏகே 63 படத்தின் இயக்குனரை முடிவு செய்த அஜித்

ஆடை இல்லாமல் நடிக்க சமந்தா சம்மந்தம் சர்ச்சையில் சிக்குவாரா | Will Samantha get into controversy ..