சீரியல் நடிகை ஷூட்டிங்கில் வழுக்கி விழுந்து இரத்த காயம்
பாக்கியலட்சுமி சீரியலில் கீழே வழுக்கி விழும் காட்சி ஒன்று எடுக்கப்பட்டது அதில் நிஜமாகவே விழுந்து இரத்தத்துடன் எழுந்திருக்கிறார் பாக்யாவின் மருமகள்.பிரபல தொலைக்காட்சியில் இரவு 8.30 மணிக்கு ஒளிபரப்பாகி வரும் தொடர் தான் பாக்கியலட்சுமி. இந்த சீரியல் தொடருக்கு என்று தனி ரசிகர் பட்டாளமே இருக்கிறது. இந்த சீரியலில் ஜெனியாக நடித்து வருபவர் தான் திவ்யா. இவர் சீரியலில் மூத்த மகன் செழியனின் மனைவியாக நடித்து வருகிறார். இந்நிலையில் திவ்யா தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வீடியோ ஒன்றை வெளியிட்டிருந்தார்.அந்த வீடியோவில் கடந்த வார எபிசோட்டில் கர்ப்பமாக இருக்கும் ஜெனி கீழே வழுக்கி விழும் காட்சி வெளியாகியிருந்தது.ஆனால் அந்தக் காட்சி எடுக்கும் போது ஜெனிக்கு கையில் அணிந்திருந்த வளையல் உடைந்து குத்தியதில் அவருக்கு ஆழமான காயம் எற்பட்டுள்ளது. அப்போது அங்கிருந்தவர்கள் அவருக்கு முதலுதவி செய்துள்ளதையும்அந்த வீடியோவில் காணலாம்.
GIPHY App Key not set. Please check settings