சீரியல் நடிகை காயத்ரி யுவராஜ்க்கு இரண்டாவது குழந்தை
பிறந்துள்ளது.
சன் டிவியில் தென்றல் என்கிற சீரியலில் தென்றலாக வீசியவர்தான் நடிகை காயத்ரி, அதனை தொடர்ந்து சரவணன் மீனாட்சி, மெல்ல திறந்தது கதவு, தாமரை போன்ற சீரியல்களில் நடித்து ரசிகர்களுக்கு பிடித்த நடிகையானார்.
இவர் 2011 இல், நடிகர் மற்றும் நடன இயக்குனரான யுவராஜ் என்பவரை மணந்தார். இவர்களுக்கு 13 வயதில் மகன் இருக்கும் நிலையில் 2-வது ஆக பெண் குழந்தை பிறந்துள்ளது. காயத்ரியின் பிறந்தநாளான இன்று அவருக்கு குழந்தை பிறந்ததை மகிழ்ச்சியுடன் தன் குழந்தையோடு இருக்கும் புகைப்படத்தை சோசியல் மீடியாவில் பகிர்ந்துள்ளார்