in

சிவகாமி யானைக்கு கல் மண்டபத்துடன் கூடிய கல் சிலை


Watch – YouTube Click

சிவகாமி யானைக்கு கல் மண்டபத்துடன் கூடிய கல் சிலை

திருப்பத்தூர் அருள்மிகு ஸ்ரீ திருத்தளிநாதர் திருக்கோவிலில் 52 ஆண்டுகளாக இருந்து மறைந்த சிவகாமி யானைக்கு 50 லட்சம் மதிப்பீட்டில் கல் மண்டபத்துடன் கூடிய கல் சிலை அமைப்பதற்கு குன்றக்குடி அடிகளார் அவர்கள் அடிக்கல் நாட்டினார்

சிவகங்கை மாவட்டம் திருப்பத்தூர் நகர் மையப்பகுதியில் அமைந்துள்ள புராண சிறப்பு மிக்க அருள்மிகு ஸ்ரீ சிவகாமி அம்பாள் சமேத ஸ்ரீ திருத்தளிநாதர் திருக்கோவிலில் 52 ஆண்டு காலமாய் சுவாமி அம்மனுக்கு சேவை செய்து வந்த சிவகாமி யானை ஓராண்டுகளுக்கு முன்பு இறந்தது

இந்த யானைக்கு அரசு சார்பில் புதிதாக 50 லட்சம் மதிப்பீட்டில் கல் மண்டபத்துடன் கூடிய கல் சிலை அமைப்பதற்கு இன்று குன்றக்குடி அடிகளார் அவர்களால் அடிக்கல் நாட்டப்பட்டது இக்கோவிலில் இருந்து வந்த சிவகாமி யானை கோவிலில் நடைபெறும் விழாக்களிலும் சுவாமி அம்மனுக்கும் சேவைகள் செய்தும் பக்தர்களுக்கு ஆசிர்வாதமும் கொடுத்து வந்தது ஒரு ஆண்டுகளுக்கு முன்பு வயது மூப்பின் காரணமாகவும் நோயாலும் அவதிப்பட்டு வந்த சிவகாமி யானை இறந்தது இதற்கு தற்போது யானை இருந்த இடம் அருகே 18 அடியில் கல் மண்டபமும் எட்டு அடியில் கல் சிலையும் அமைப்பதற்கு அரசின் சார்பில் இன்று குன்றக்குடி அடிகளார் அவர்கள் அடிக்கல் நாட்டினார் முன்னதாக மூலவர் சுவாமி அம்மனுக்கு சிறப்பு பூஜைகள் நடைபெற்றது தொடர்ந்து சிவாச்சாரியார்கள் புனித நீர் நிரப்பப்பட்ட கலசங்களை வைத்து கணபதி பூஜையுடன் துவங்கியது தொடர்ந்து செங்கலுக்கு சந்தனம் குங்குமம் வைத்து சிறப்பு பூஜைகள் நடந்தன

பின்னர் வாஸ்து பூஜை நடைபெற்று தீப ஆராதனை காண்பிக்கப்பட்டன தவத்திரு ஸ்ரீ குன்றக்குடி அடிகளார் அவர்கள் பூஜை செய்த செங்கலை வைத்து மஞ்சள் பால் ஊற்றி வழிபாடு செய்தனர் தொடர்ந்து கூட்டுறவுத்துறை அமைச்சர் பெரிய கருப்பன் அறநிலை துறை அதிகாரிகள் ஊர் முக்கிய பிரமுகர்கள் மற்றும் பொதுமக்கள் கலந்து கொண்டு வழிபாடு செய்து செங்கலை வைத்தனர் நிறைவாக தீப ஆராதனை காண்பிக்கப்பட்டன.


Watch – YouTube Click

What do you think?

செங்கல்பட்டு மாவட்டத்தில் புயல் முன் ஏற்படுகள் குறித்த ஆய்வுக் கூட்டம்

வாழ்வை உயர்த்தும் புத்தகங்கள்