சிவகங்கை அருள்மிகு சனீஸ்வரர் திருக்கோவிலில் சனிக்கிழமை திருநாளை முன்னிட்டு சிறப்பு யாக பூஜைகள் மற்றும் அபிஷேகங்கள் நடைபெற்றது
சிவகங்கை மாவட்டம் சிவகங்கை நகரில் அமைந்துள்ள பிரசித்தி பெற்ற அருள்மிகு ஸ்ரீ சனீஸ்வரர் திருக்கோவிலில் ஐப்பசி மாத சனிக்கிழமையை முன்னிட்டு சிறப்பு யாக பூஜைகள் மற்றும் அபிஷேகங்கள் நடைபெற்றது
இத் திருக்கோவிலில் தனி சன்னதி கொண்டு சனீஸ்வரர் நின்ற நிலையில் தனது வாகனத்துடன் அருள் பாலித்து வருகிறார் சனிக்கிழமை நாளில் சன்னதி முன்பு புனித நீர் நிரப்பப்பட்ட கலசங்களில் வைத்து தியாகு குண்டம் அமைத்து கணபதி பூஜையுடன் யாக பூஜைகள் துவங்கியது தொடர்ந்து சனீஸ்வரன் சுவாமி மூல மந்திரங்கள் நவக்கிரக ஹோமங்கள் நடைபெற்று யாக குண்டத்தில் 108 மூலிகை பொருட்கள் எள்ளு மற்றும் நெல்லிக்கனி ஆகியவை கொண்டு சமர்ப்பித்து பூர்ணகுதி அளிக்கப்பட்டன
பின்னர் தீபா ஆராதனை காண்பிக்கப்பட்டன தொடர்ந்து மூலவர் சனீஸ்வர ஸ்வாமிக்கு உற்சவர் சுவாமிக்கும் திருமஞ்சன பொடி மஞ்சள் பால் தயிர் தேன் சந்தனம் பன்னீர் உள்ளிட்ட பல்வேறு வகையான நறுமணத் திரவியங்கள் கொண்டு சிறப்பு அபிஷேகங்கள் நடைபெற்று வேத மந்திரங்களும் வழங்க கலசத்தில் உள்ள புனித நீரால் அபிஷேகம் செய்யப்பட்டனர் நிறைவாக தீப ஆராதனை காண்பிக்கப்பட்டது இதில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு சனீஸ்வர பகவானை வழிபட்டனர்.