சிவகங்கை அருகே 2 ஆயிரம் ஆண்டுகள் பழமையான பாறை ஓவியங் கள், சமணர் படுக்கைகள் அழியும் நிலையில் உள்ளன. சிவகங்கையில் இருந்து 15 கி.மீ. தொலைவில் உள்ளது திருமலை கிராமம். இங்குள்ள குன்றில் 2,200 ஆண்டுகளுக்கு முற்பட்ட பாறை ஓவியங்கள், சமணர் குகை, 8-ம் நுாற்றாண்டு முற்கால பாண்டியரின் குடைவரைக் கோயில், 13-ம் நுாற்றாண்டு பிற்காலப் பாண்டியரின் கட்டுமானக் கோயில் உள்ளன. குன்றில் 8 சுனைகள் உள்ளன. மேற்புறம் உள்ள பெரிய சுனையில் நீர் வற்றாது. இச்சுனை நீரையே சுவாமியின் அபிஷேகங்களுக்கு பயன்படுத்துகின்றனர். சுனைக்குள் விநாயகர் உருவம் பொறித்த கல் உள் ளது. இங்கு அதிக அளவில் சமணர் படுக்கைகள் உள்ளன.
படுக்கைகளுக்கு மழைநீர் வராமல் இருக்க குகைக்கு மேற் புறமுள்ள பாறையில் சிறிய வாய்க்கால் போன்று வெட்டியுள்ளனர். சமணர் படுகைகளின் மேலே சுவஸ்திக் முத்திரை பாறையில் செதுக்கப்பட்டுள்ளது. இம்முத்திரை தமிழகத்தில் வேறு எங்கும் காணப்படாத ஒன்று. இங்குள்ளது வலம் நோக்கிய சுவஸ்திக். இந்த முத்திரை இந்து, பவுத்தம், சமணம் ஆகியவற்றில் பரவலாக பயன்படுத்தப்படுகிறது. இங்குள்ள சுவஸ்திக் முத்திரை சமணர் களால் பயன்படுத்தப்பட்டவை. இந்த முத்திரை சிந்துசமவெளி நாக ரிக காலத்திலேயே பயன்பாட்டில் இருந்த தாகக் கூறப்படுகிறது.
பிராமிக் கல்வெட்டுகளை தவிர்த்து, கோயிலைச் சுற்றிலும் பிற்கால பாண் டியர்களின் 31 கல்வெட்டுகள் உள்ளன. இதன்மூலம் 13-ம் நுாற் றாண்டைச் சேர்ந்த சடையவர்ம குல சேகரப்பாண்டியன், முதல் மாறவர் மன் சுந்தரபாண்டியன், மாறவர்ம விக்கிரமபாண்டியன், இரண்டாம் மாறவர்ம சுந்தரபாண்டியன், சடாவர்ம வீரபாண்டியன், சடாவர்ம பராக் கிரம பாண்டியன், திரி புவனச் சக்கரவர்த்தி கோனேரின் மாய் கொண்டான் ஆகிய மன்னர்களுக்கும் கோயிலுக்கும் உள்ள தொடர்பை அறிய முடிகிறது.
பாறைகளில் மூலிகை ஓவியங்கள் ஏராளமாக காணப்படுகின்றன. இரு ஆடவர்கள் சண்டையிடுவது, பறவைகள் போன்ற வேடமணிந்த மனிதர்கள், தமறு என்ற இசை வாத்தியத்தை வாசிப்பது, கையில் கம்புடன் குதிரை ஓட்டுவது போன்ற ஓவியங்கள் வரையப்பட்டுள்ளன. சமணர் படுக்கைகளுக்கு அருகே மற்றொரு குகை முகப்பில் தமிழ் பிராமிக் கல்வெட்டுகள் காணப்படுகின்றன. இந்த கல்வெட்டுகள் தங்களுக்கு படுக்கை அமைத்து கொடுத்தவர்களுக்கு நன்றிக் கடனாக சமணர்கள் வெட்டியதாகக் கூறப்படுகிறது. சிலர் பாறை ஓவியங் களிலும், சமணர் படுக்கைளிலும் பெயின் டால், கற்களால் எழுதி சேதப்படுத்தி வருகின்றனர்.
இதுகுறித்து தொல்லியல் ஆர் வலர் அய்யனார் கூறுகையில், திருமலைக்கு பக்தர்கள், சுற்றுலா பயணிகள், தொல்லியல் ஆர்வலர்கள் அதிகளவில் வருகின்றனர். நீதிமன்றம் உத்தரவால் தொல்லியல்துறை திருமலையைப் பாதுகாக்கப்பட்ட பகுதி யாக அறிவித்தது. ஆனால் எந்த வித பாதுகாப்பு நடவடிக்கையும் எடுக்க வில்லை. சுற்றுலாத்துறையும் கண்டு கொள்ளவில்லை. குகைகள், பாறை ஓவியங்கள், சமணர் படுக்கைகளை சமூக விரோதிகள் சேதப்படுத்தி வருகின்றனர். அவற்றை உள்ளூர் இளைஞர்கள் தான் பாதுகாத்து வருகின்றனர், என்றார்.