சில லட்சங்கள் மட்டுமே வசூல்.. கதி கலங்கிய சாந்தனு
தன்னுடைய தந்தை பாக்யராஜ் அவர்களின் படங்களில் நடித்ததன் மூலம் தமிழ் ரசிகர்களுக்கு பரிச்சயமானவர் நடிகர் சாந்தனு. கடந்த வெள்ளிக்கிழமை அன்று சாந்தனுவின் இராவணக் கூட்டம் என்ற படம் வெளியானது.இந்த படம் மாபெரும் வெற்றி பெறும் என அவர் எதிர்பார்த்து காத்திருந்தார்.ஆனால் இப்போது மூன்று நாள் வசூல் நிலவரத்தை பார்ப்பதன் கதி கலங்கி போய் இருக்கிறார். ஏனென்றால் இந்த படமும் சாந்தனுக்கு சரியான ரிசல்ட்டை கொடுக்கவில்லை. இந்த படத்தில் ராமநாதபுரம் மாவட்ட இளைஞராகவே மாறி கஷ்டப்பட்டு நடித்தும் முடித்தார். இதில் சாதிய பிரச்சனைகளை பற்றிய விஷயங்களை துணிச்சலுடன் கூறியதால் பிரபலங்கள் பலரும் இந்த படத்திற்கு பாராட்டுகளை தெரிவித்துக் கொண்டிருக்கின்றனர். மிகக் குறைந்த தியேட்டர்களில் மட்டுமே ரிலீஸ் ஆன இராவண கோட்டம் படத்தை பார்ப்பதற்கு ரசிகர்கள் ஆர்வம் காட்டவில்லை அதிலும் கொடுமை என்னவென்றால் 6 கோடி பட்ஜெட்டில் எடுக்கப்பட்ட இந்த படம் 14 வருடங்களுக்கு முன்பாகவே ஆரம்பிக்கப்பட்டு கொரோனா உள்ளிட்ட பிரச்சினைகளால் சிக்கி ரொம்பவே தாமதமாகவே ரிலீஸ் செய்யப்பட்டது.இப்படிப்பட்ட சூழலில் 3 நாட்களில் சாந்தனுவின் இராவணக் கோட்டம் வெறும் 45 லட்சம் மட்டுமே வசூல் செய்திருப்பது படக் குழுவை பெரும் அதிர்ச்சியை கொடுத்துள்ளது. ஒட்டுமொத்தமாக 1 கோடியை கூட வசூலிக்காத இந்த படத்தை நம்பி வாங்கிய தியேட்டர் உரிமையாளர்களும் விழி பெருங்கி நிற்கின்றனர்.இவ்வாறு ஒவ்வொரு படத்திலும் தன்னுடைய முழு முயற்சியையும் கொடுத்துக் கொண்டிருக்கும் சாந்தனுவிற்கு அடிமை அடி விழுகுவதால் பெரும் கவலையில் இருக்கிறார்
GIPHY App Key not set. Please check settings