சிறப்பு கலந்தாய்வு திடீர் ரத்து: ஜிப்மர் நிர்வாகத்தை கண்டித்து மாணவர்கள், பெற்றோர் தர்ணா | consultation cancel

ஜிப்மரில் நடக்கவிருந்த சிறப்பு கலந்தாய்வு திடீரென ரத்து செய்யப்பட்டதால் வெளிமாநில மாணவர்கள், பெற்றோர் ஜிப்மர் நிர் வாகத்தை கண்டித்து தர்ணாவில் ஈடுபட்டனர்.

இந்திய மருத்துவ கலந்தாய்வு குழு உத்தரவின்படி மருத்துவ படிப்புக்கு முதற்கட்டம், 2-ம் கட்டம் மற்றும் மாப்-அப் கலந்தாய்வு நடத்தி இடங்களை நிரப்ப வேண்டும்.இறுதிக்கட்ட கலந்தாய்வுக்கு பிறகுஏற்படும் காலியிடங்கள் `ஸ்ட்ரே வேகன்சி ரவுண்ட்’ என்ற பெயரில் சிறப்பு கலந்தாய்வு நடத்தி நிரப்பிக் கொள்ளலாம் என மருத்துவ கலந்தாய்வு குழு அறிவித்தது.

அதன்படி, ஜிப்மர் காரைக்கால் கிளையில் அகில இந்திய ஒதுக் கீட்டில் நிரம்பாத எம்பிபிஎஸ் இடங் களுக்கு கடந்த 29-ம் தேதி சிறப்பு கலந்தாய்வு நடக்க இருந்தது. இதனை தேதி குறிப்பிடாமல் ஜிப் மர் நிர்வாகம் ஒத்தி வைத்தது.

இந்நிலையில் ஜனவரி 10-ம் தேதி (நேற்று) காலை 8 மணி முதல் மதியம் 12 மணி வரை ஜிப்மர் அப்துல் கலாம் கலையரங்கில் சிறப்புகலந்தாய்வு நடைபெறும் என்றும்,இதில் மாணவர்கள் நேரடியாக பங்கேற்கலாம் என்றும் அறிவிக் கப்பட்டிருந்தது.

மேலும், திடீரென 2 நாட்களுக்கு முன்பு தரவரிசை அடிப்படையில் 190 மாணவர்களின் பட்டியலை வெளியிட்டு, அவர்கள் மட்டும் கலந்தாய்வில் பங்கேற்குமாறு அறி வித்தது. அதன்படி நேற்று காலை ஜிப்மரில் கலந்தாய்வு நடத்த ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. இதுநேரடி கலந்தாய்வு என்பதால் புதுச்சேரி, தமிழ்நாடு, கேரளா,ஆந்திரா, கர்நாடகா, மகாராஸ்டிரா, ராஜஸ்தான் என பல மாநிலங் களைச் சேர்ந்த 200-க்கும் மேற் பட்ட மாணவர்கள் தங்களது பெற்றோருடன் கலந்தாய்வு நடைபெறும் இடத்தில் குவிந்தனர்.

ஆனால், ஜிப்மர் வெளியிட்ட பட்டியலில் இடம்பெறாத மாண வர்களும் அங்கு குவிந்ததால் சிறப்புக் கலந்தாய்வை ரத்து செய்வதாக ஜிப்மர் நிர்வாகம் திடீரென அறிவித்தது. இதனால் அதிருப்தியடைந்த மாணவர்கள் ஜிப்மர் நிர்வாகத்திடம் இது தொடர்பாக முறையிட்டனர்.

அப்போது மாணவர்கள், ‘‘ஜிப் மர் வெளியிட்ட பட்டியலில் உள்ள மாணவர்களில் பலர் ஏற்கெனவே ஜிப்மரிலேயே எம்பிபிஎஸ் சேர்ந் துள்ளனர். மற்றவர்கள் எய்ம்ஸ் உள்ளிட்ட பல்வேறு மருத்துவக் கல்லூரிகளில் சேர்ந்துவிட்டனர். எனவே, சிறப்புக் கலந்தாய்வு நடத்தவேண்டும்’’ எனக் கோரிக்கை வைத்தனர்.

இதற்கு ஜிப்மர் நிர்வாகம், ‘‘ஜிப்மர் இணையதளத்தில் கலந் தாய்வு தொடர்பாக அறிவிப்பு வரும்.அதனை பார்த்துவிட்டு வாருங் கள்’’ என்று கூறியது. இதனால் புதுச்சேரியைச் சேர்ந்த மாணவர் கள் ஏமாற்றத்துடன் திரும்பினர்.

ஆனால், பல்வேறு மாநிலங் களில் இருந்து வந்த மாணவர்களும், பெற்றோரும் ஜிப்மர் நிர்வாகத்தை கண்டித்து ஜிப்மர் மருத்துவமனை நுழைவாயில் முன்பு அமர்ந்து தர்ணாவில் ஈடுபட்டனர். இதனால் ஜிப்மர் நுழைவாயில் மூடப்பட்டது. அங்கு வந்த கோரிமேடு போலீ ஸார் மாணவர்களிடம் பேச்சு வார்த்தையில் ஈடுபட்டனர். இருப்பினும், மாணவர்கள் ஜிப்மர் தரப்பிலிருந்து முறையான பதில்வராமல் கலைந்து செல்ல மாட் டோம் என்று தெரிவித்தனர்.

இதையடுத்து ஜிப்மர் மருத்துவ கண்காணிப்பாளர் அசோக் சங்கர் படே தலைமையிலான குழுவினர், மாணவர்களிடம் பேச்சு வார்த்தை நடத்தினர். அப்போது, ‘‘ஜிப்மர் காரைக்கால் கிளையில் உள்ள காலியிடங்களுக்கு வரும் 12-ம் தேதி மதியம் 12 மணிக்குள் பதிவு செய்யுங்கள். பிறகு கலந்தாய்வில் பங்கேற்போர் குறித்த பட்டியல் வெளியிடப்படும். அதன் அடிப்படையில் வரும் 15-ம் தேதி கலந்தாய்வு நடத்தப்படும்’’ என தெரிவித்தனர். இதையடுத்து அவர்கள் கலைந்து சென்றனர்.

நன்றி இந்து தமிழ் திசை