சினிமா மீதான காதலால் டாட்டூ குத்திய நடிகை திரிஷா
தமிழ் திரையுலகில் முன்னணி நடிகையாக வலம் வரும் திரிஷா, சினிமா மீதான காதலை வெளிப்படுத்தும் விதமாக குத்தியுள்ள டாட்டூவின் புகைப்படம் வெளியாகி உள்ளது. தமிழ் திரையுலகில் முன்னணி நடிகையாக வலம் வருபவர் திரிஷா. 40 வயதை நெருங்கிவிட்டாலும், அழகு தேவதையாக காட்சியளிக்கும் நடிகை திரிஷாவுக்கு சினிமாவில் பட வாய்ப்புகளும் குவிந்த வண்ணம் உள்ளன. திரிஷா நடிப்பில் தற்போது பொன்னியின் செல்வன் 2 திரைப்படம் தயாராகி உள்ளது. இப்படம் வருகிற ஏப்ரல் 28-ந் தேதி ரிலீஸ் ஆக உள்ளது. இதற்கான புரமோஷன் பணிகளில் தற்போது பிசியாக உள்ளார் திரிஷா. இப்படி பிசியான நடிகையாக வலம் வரும் திரிஷாவுக்கு டாட்டூ மீது அதீத பிரியம் உண்டு. அதனால் தனக்கு பிடித்தவற்றை டாட்டூவாக போட்டுக்கொள்வார். அந்த வகையில் நெஞ்சில் நெமோ என்கிற மீனை டாட்டூவாக போட்டுள்ள திரிஷா, கையில் தனது ராசியின் சின்னத்தை டாட்டூவாக குத்தி உள்ளார். இந்த இரு டாட்டூக்களை பலரும் பார்த்திருக்கக்கூடும். ஆனால் அவர் போட்டுள்ள மற்றொரு டாட்டூ தான் ஹைலைட்டானது.
அதன்படி சினிமா மீது தனக்குள்ள காதலை வெளிப்படுத்தும் விதமாக தனது முதுகில் டிரைபாடு உடன் கூடிய கேமரா மற்றும் கிளாப் போர்டு ஆகியவற்றை டாட்டூவாக குத்தி உள்ளார். அவர் இந்த டாட்டூவை கடந்த 2016-ம் ஆண்டே போட்டுக்கொண்டாலும் பெரியளவில் இதுகுறித்த புகைப்படங்கள் வெளியானதில்லை. நடிகை திரிஷா குத்திக் கொண்ட டாட்டூக்களிலே இது தான் பெரியது. தற்போது பொன்னியின் செல்வன் பட புரமோஷனின் போது எடுத்த புகைப்படங்களில் திரிஷாவின் டிரைபாடு கேமரா டாட்டூவை பார்த்து வியந்து அதனை வைரலாக்கி வருகின்றனர்.
GIPHY App Key not set. Please check settings