சமந்தா எத்தனை தொழில்கள் செய்கிறார் தெரியுமா?
நடிகை சமந்தா இன்று தனது 36ஆவது பிறந்தநாளை கொண்டாடும் சூழலில் அவர் செய்யும் பிற தொழில்கள் குறித்த தகவல்கள் வெளியாகியிருக்கின்றன. தமிழ்நாட்டை பூர்வீகமாகக் கொண்ட சமந்தா தமிழ் மட்டுமின்றி தெலுங்கு உள்ளிட்ட மொழிகளில் முன்னணி நடிகையாக வலம் வந்தவர். தெலுங்கில் நடித்தபோது நாக சைதன்யாவை காதலித்தார். இவர்களது திருமணம் கோவாவில் பிரமாண்டமாக நடந்தது. திருமணத்துக்குப் பிறகும் சமந்தா திரைப்படங்களில் நடிப்பதில் தீவிர கவனம் செலுத்திவந்தார். திடிர்என்று சமந்தாவும், நாக சைதன்யாவும் பிரிவதாக இருவருமே அறிவித்தனர். ஆனால் தங்களது பிரிவு குறித்து இரண்டு பேருமே அமைதியாக இருந்தார்கள். இப்படி இருக்க சமந்தாவுக்கு மையோசிடிஸ் எனும் தோல் நோய் வந்தது. அதற்காக அவர் பல மாதங்கள் சிகிச்சையில் இருந்தார். ஒருவழியாக சிகிச்சையை முடித்தார்: இந்நிலையில் சமந்தா இன்று தனது 36ஆவது பிறந்தநாளை கொண்டாடிவருகிறார். அவருக்கு ரசிகர்கள் முதல் திரையுலக பிரபலங்கள்வரை பலரும் பலரும் தங்களது வாழ்த்துகளை தெரிவித்துவருகின்றனர். இப்படிப்பட்ட சூழலில் சமந்தா செய்துவரும் பிற தொழில்கள் குறித்த தகவல்கள் வெளியாகியுள்ளன. அதன்படி, சமந்தா ரியல் எஸ்டேட்டில் அதிகளவு முதலீடு செய்திருப்பதாகவும், அதன் மூலம் வந்த வருவாயில் ஹைதராபாத், மும்பை உள்ளிட்ட நகரங்களில் வீடுகள் கட்டியிருப்பதாகவும் கூறப்படுகிறது.மேலும், சூப்பர் ஃபுட் நிறுவனத்தில் அவர் செய்திருக்கும் முதலீடு மூலம் வருடம் 1 மில்லியன் டாலருக்கும் மேல் சம்பாதிக்கிறாராம். அதேபோல் சாக்கி எனும் ஃபேசஹன் பிராண்ட் ஒன்றையும், ப்ளே ஸ்கூல் ஒன்றையும் சொந்தமாக நடத்திவருகிறாராம் சமந்தா.
GIPHY App Key not set. Please check settings