in

சசிவர்னேஸ்வரர் கோவிலில் மகா பைரவாஷ்டமி சிறப்பு ஹோம்


Watch – YouTube Click

சிவகங்கை அருள்மிகு ஶ்ரீ சசிவர்னேஸ்வரர் திருக்கோவிலில் மகா பைரவாஷ்டமியை முன்னிட்டு சிறப்பு ஹோமங்கள் மற்றும் அபிஷேக ஆராதனைகள் நடைபெற்றது

சிவகங்கை மாவட்டம் சிவகங்கை நகர் மையப்பகுதியில் அமைந்துள்ள பிரசித்தி பெற்ற அருள்மிகு ஸ்ரீ சசிவர்னேஸ்வரர் திருக்கோவில் மகா பைரவாஷ்டமியை முன்னிட்டு சிறப்பு ஹோமங்கள் மற்றும் அபிஷேக ஆராதனைகள் நடைபெற்றது
முன்னதாக கணபதி பூஜையுடன் யாக பூஜைகள் தொடங்கியது தொடர்ந்து யாகத்தில் 108 மூலிகை பொருட்கள் பட்டு வஸ்திரங்கள் சமர்ப்பித்து பூர்ணகுதி அளிக்கப்பட்டன பின்னர் மங்கள வாத்தியங்களுடன் கடம் புறப்பாடு நடைபெற்று மூலவர் பைரவர் சுவாமிக்கு திருமஞ்சன பொடி மஞ்சள் பால் தயிர் பஞ்சாமிர்தம் சந்தனம் விபூதி பன்னீர் உள்ளிட்ட பல வகையான நறுமணத் திரவியங்கள் கொண்டு சிறப்பு அபிஷேகங்கள் நடைபெற்று தொடர்ந்து வேத மந்திரங்கள் முழங்க கலசத்தில் உள்ள புனித நீரால் அபிஷேகம் செய்யப்பட்டது இதனை அடுத்து சிறப்பு அலங்காரம் செய்து மகா தீபாராதனை காண்பிக்கப்பட்டன இதில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு பைரவர் சுவாமிய வழிபட்டனர்.


Watch – YouTube Click

What do you think?

தியாகராஜர் ஆலயத்தில் ஜென்மாஷ்டமி முன்னிட்டு அஷ்ட பைரவருக்கு மகா சண்டி யாகம்

சேதமடைந்துள்ள சாலையை சீரமைக்கும் காவலர் குவியும் பாராட்டு