in

கோழி கடையில் புகுந்து திருட முயன்ற வட மாநில இளைஞர் |northern youth state to steal from chicken shop


Watch – YouTube Click

நாகை அருகே கோழி கடையில் புகுந்து திருட முயன்ற வட மாநில இளைஞரை மரத்தில் கட்டி வைத்து தாக்கியதால் பரபரப்பு

நாகப்பட்டினம் மாவட்டம் வேளாங்கண்ணி அருகே உள்ள பூவைத்தேடி பேருந்துநிலையம் வடக்கு புறம் அருகே உள்ள ஆறுமுகம் என்பவர் கோழிக்கடையில் கடையில் யாரும் இல்லாத நேரத்தில் கேட்டை உடைத்து உள்ளே சென்று கல்லாப்பெட்டியை எடுப்பதற்காக நுழைவதாக கோழிக்கடையின் உரிமையாளர் ஆறுமுகம் வீட்டிலிருந்தபடியே சிசிடிவி கேமராவில் பார்த்துள்ளார்

உடனடியாக அருகில் இருந்தவர்களை போய் பார்க்க கூறியுள்ளார் அருகில் இருந்தவர்கள் வந்து பார்த்தபோது வடமாநில இளைஞர் ஒருவர் கோழிக்கடையில் உள்ளே கேட்டை உடைத்துக் கொண்டு உள்ளே நின்றது தெரிய வந்தது

உடனே பொதுமக்கள் பிடித்து அருகில் இருந்த வேப்பமரத்தில் கட்டி வைத்து தாக்கி கீழையூர் காவல் நிலையத்திற்கு தகவல் தெரிவித்தனர் தகவலின் பெயரில் காவல்துறையினர் அவரை மீட்டு காவல் நிலையத்திற்கு அழைத்து சென்றனர் விசாரணையில் அவர் மத்திய பிரதேசத்தைச் சேர்ந்த ராஜ்பவன் என்பதும் சில தினங்களுக்கு முன்பு இதே பகுதியில் ஒரு வீட்டில் புகுந்து திருட முயன்றதும் விசாரணையில் தெரியவந்துள்ளது

மேலும் இவனுடன் 5நபர்கள் வந்ததாகவும் இதில் நான்கு பேர் தப்பிச்சென்ற நிலையில் ஒருவன் மட்டும் பிடிபட்டதாக பொதுமக்கள் கூறுகின்றனர் நாகை அருகே திருட வந்த வட மாநில இளைஞரை மரத்தில் கட்டி வைத்த தாக்கிய சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது தொடர்ந்து இப்பகுதியில் தொடர் திருட்டு நடைபெறுவதால் பொதுமக்களும் அச்சத்தில் உறைந்துள்ளனர்


Watch – YouTube Click

What do you think?

சிலிண்டர் விலை குறைந்தது | The cylinder price has come down | Britain Tamil News

புயல் சின்னம், கடல் சீற்றம், காரணமாக மீனவர்கள் வாழ்வாதாரம் பாதிப்பு