in

கோயிலினுள், மற்றவர்களை அனுமதிக்க மறுத்ததாக கூறி தர்ணா போராட்டம்


Watch – YouTube Click

விருதுநகர் மாவட்டம் ராஜபாளையம் அருகே ஒரு பிரிவினருக்கு சொந்தமான கோயிலினுள், மற்றவர்களை அனுமதிக்க மறுத்ததாக கூறி 50 க்கும் மேற்பட்ட பெண்கள் கோயில் வாசலில் அமர்ந்து தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.

விருதுநகர் மாவட்டம் ராஜபாளையம் தென்காசி சாலையில் ஊராட்சி ஒன்றிய அலுவலகம் அருகே அமைந்துள்ள மாப்பிள்ளை சுப்பராஜா தெருவில் அங்காள ஈஸ்வரி கோயில் அமைந்துள்ளது. இந்த கோயிலை நிர்வாகிக்கும் ஒரு பிரிவினர் பெரும்பாலானோர் வெளியூரில் வசிக்கின்றனர். எனவே அருகே உள்ள பகுதியைச் சேர்ந்த மக்கள் பிரதோஷம், பெர்ணமி, அமாவாசை போன்ற முக்கிய தினங்கள் உள்ளிட்ட அனைத்து நாட்களிலும் வழிபாடு நடத்துவது வழக்கம்.

கார்த்திகை மாதம் ஐயப்பனுக்கு விரதம் இருப்பவர்கள், மார்கழியில் பஜனை மற்றும் அன்னதானம் செய்வது, இருக்கன்குடி மாரியம்மன் கோயிலுக்கு செல்வோர் தை மாதம் அன்னதானம் வழங்குவதும் கடந்த 10 ஆண்டுகளுக்கு மேல் வழக்கமாக நடைபெற்று வந்ததாக தெரிகிறது.

இந்த நிலையில், தொடர்ந்து வழிபாடு செய்யும் சிலர் கோயிலை ஆக்கிரமித்து கொள்ளும் நோக்கோடு நடப்பதாக கூறி கோயிலை நிர்வகிக்கும் பிரிவினர் தங்கள் சமூகத்தை தவிர்த்து மற்ற யாரும் கோயிலுக்குள் வந்து வழிபட வேண்டாம் என அறிவிப்பு செய்ததாக கூறப்படுகிறது.

இதனால் அதிர்ச்சி அடைந்த அப்பகுதியைச் சேர்ந்த பெண்கள் உள்ளிட்ட 50க்கும் மேற்பட்டோர் இன்று கோயில் வாசலில் அமர்ந்து தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டனர்.

தகவல் அறிந்து வந்த காவல்துறையினர் போராட்டத்தில் ஈடுபட்ட மக்களுடன் பேச்சு வார்த்தை நடத்தினர். அனைவரும் கோயிலில் சென்று வழிபாடு செய்ய உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என்ற அதிகாரிகளின் உறுதியை ஏற்றுக்கொண்ட பொதுமக்கள் போராட்டத்தை கைவிட்டு கலைந்து சென்றனர். பொது மக்களின் இந்த போராட்டத்தால் அப்பகுதியில் சுமார் 2 மணி நேரம் பரபரப்பு காணப்பட்டது.


Watch – YouTube Click

What do you think?

கும்பகோணத்தில் அம்பேத்கரின் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை

(06.12.2023) இன்றைய முக்கிய செய்திகள் – Britain Tamil news