in

கே எஸ் ராஜா மகளிர் கல்லூரி சார்பில் உலக எய்ட்ஸ் விழிப்புணர்வு பேரணி


Watch – YouTube Click

கே எஸ் ராஜா மகளிர் கல்லூரி சார்பில் உலக எய்ட்ஸ் விழிப்புணர்வு பேரணி

செஞ்சி செல்லப்பிரைட்டை பகுதியில் இயங்கி வரும் கே.எஸ்.ராஜா மகளிர் கல்லூரி சார்பில் நடைபெற்ற உலக எய்ட்ஸ் விழிப்புணர்வு பேரணி ஊர்வலத்தை அமைச்சர் செஞ்சி மஸ்தான் கொடியசைத்து தொடங்கி வைத்தார்.

உலக எய்ட்ஸ் தினத்தை முன்னிட்டு விழுப்புரம் மாவட்டம் செஞ்சி கே.எஸ் ராஜா மகளிர் கல்லூரி சார்பில் உலக எய்ட்ஸ் விழிப்புணர்வு பேரணி ஊர்வலம் நடைபெற்றது.

செஞ்சி பேரூராட்சி அலுவலகம் எதிரில் நடைபெற்ற நிகழ்ச்சிக்கு செஞ்சி ஒன்றிய பெருந்தலைவர் விஜயகுமார் ,செஞ்சி பேரூராட்சி மன்ற தலைவர் மொக்தியார் மஸ்தான் ஆகியோர் முன்னிலையில்

செஞ்சி – சேத்பட் சாலை செல்லப்பிரைட்டை பகுதியில் இயங்கி வரும் கே எஸ் ராஜா மகளிர் கல்லூரியின் செயலாளர் பாக்யஸ்ரீ ஏற்பாட்டில் நடைபெற்ற உலக எய்ட்ஸ் விழிப்புணர்வு பேரணியை சிறுபான்மையினர் நலன் மற்றும் வெளிநாடு வாழ் தமிழர்கள் நலத்துறை அமைச்சர் செஞ்சி மஸ்தான் கலந்து கொண்டு கொடியசைத்து தொடங்கி வைத்தார்.

விழிப்புணர்வு பேரணியில் எய்ட்ஸ் நோயின் தன்மை, பாதிக்கப்பட்டவர்களின் பிரச்சனைகள், இதனால் மக்கள் மேற்கொள்ள வேண்டிய வழி முறைகள், கடைபிடிக்க வேண்டிய மருத்துவ வழிமுறைகள் குறித்து பதாகைகளை கல்லூரி மாணவிகள் கையில் ஏந்தி காந்தி பஜார் வீதியில் நடந்து சென்று செஞ்சி நான்கு முனை சாலை வழியாக செஞ்சி வட்டாட்சியர் அலுவலகம் சென்று திண்டிவனம் சாலை வழியாக செஞ்சி அரசு மருத்துவமனை வரை சென்றனர். பேரணியில் 500 க்கும் மேற்பட்ட கல்லூரி மாணவிகள் பங்கேற்றனர்

இந்த விழிப்புணர்வு பேரணி நிகழ்ச்சியில் பேரூராட்சி செயல் அலுவலர் செந்தில்குமார் போக்குவரத்து காவல் ஆய்வாளர் அப்பாண்டைராஜ் மற்றும் பொதுமக்கள் கலந்து கொண்டனர்.


Watch – YouTube Click

What do you think?

முத்து நகரில் சேற்றில் இறங்கி நாற்று நடும் போராட்டம்

வீணாகும் மதுராந்தகம் ஏரி நீர்