கேளிக்கை விடுதியில் தீ விபத்து

இங்கிலாந்தின் ஹெர்ட்போர்டுஷிர் பகுதியில் அமைந்துள்ள கேளிக்கை விடுதியின் வெளியரங்க பகுதியில் வியாழக்கிழமை நேரிட்ட தீ விபத்தில், 25 ஆயிரம் பவுண்ட் மதிப்பிலான பொருள்கள் எரிந்து நாசமாகின. இந்தத் தீ விபத்து சதி செயலாக இருக்கலாம் என்று கூறப்படுகிறது.

எனவே இதுகுறித்து தகவலறிந்தவர்கள் அல்லது சாட்சியங்கள் அதனை தங்களிடம் பகிரலாம் என போலீஸôர் கேட்டுக் கொண்டுள்ளனர்.

ஹெர்ட்போர்டுஷிர் லூதோன் பகுதியில் தி வைட் ஹார்ஸில் அமைந்துள்ள இந்தக் கேளிக்கை விடுதி, பொதுமக்களின் பயன்பாட்டுக்காக புதன்கிழமை திறக்கப்பட்டது. தீ விபத்துக்குள்ளான வெளியரங்கப் பகுதி, வியாழக்கிழமை திறக்கப்படுவதாக இருந்த நிலையில், திடீரென தீப்பிடித்து எரிந்தது.

பிரிட்டனில், வெளியரங்க நிகழ்வுகளில் 6 பேர் அல்லது இரண்டு குடும்பத்தினர் இணைந்து பங்கேற்கலாம் என விதிமுறைகளில் தளர்வு ஏற்படுத்தப்பட்ட சில தினங்களிலேயே இந்த விபத்து ஏற்பட்டிருப்பது குறிப்பிடத்தக்கது.

Add your comment

Your email address will not be published.

4 × 5 =