கேப்டன் மில்லர் ஷூட்டிங்கில் குண்டு வெடிப்பு.. படப்பிடிப்பு நிறுத்த உத்தரவு
நடிகர் தனுஷ் நடிப்பில் அருண் மாதேஸ்வரன் இயக்கத்தில் பிரமாண்டமாக உருவாகி வரும் படம் கேப்டன் மில்லர். இப்படத்தில் சிவ ராஜ்குமார், பிரியங்கா மோகன், சந்தீப் போன்ற பல நடிகர்கள் நடித்து வருகின்றனர்.
இப்படம் 1930 -ம் காலகட்டத்தில் நடந்த சம்பவத்தை மையமாக வைத்து இப்படம் தயாராகி வருகிறது. தற்போது திருநெல்வேலி மாவட்டத்தில் உள்ள முண்டன் துறையில் கேப்டன் மில்லர் திரைப்படத்தின் ஷூட்டிங் மும்முரமாக நடந்து வருகிறது. இந்நிலையில் வனப்பகுதியில் டம்மி குண்டுகளை வெடிக்கவைத்தும், தீ மூட்டி சில காட்சிகளை எடுப்பதால் விலங்குகளை அச்சுறுத்தும் வகையில் இருப்பதாக புகார்கள் எழுந்துள்ளது.
இதனால் முறையாக அனுமதி பெறாமல் குண்டு வெடிக்கும் காட்சி படமாக்கப்பட்டதால் படப்பிடிப்பை நிறுத்த மாவட்ட ஆட்சியர் உத்தரவு பிறப்பித்துள்ளார்.

பிரபல நடிகருடன் தமன்னா நெருக்கமா????? கசிந்தது டேட்டிங் வீடியோ | Tamana dating video leaked

GIPHY App Key not set. Please check settings