கேன்ஸ் திரைப்பட விழாவில் உக்ரைன் பெண் செய்த காரியம்… | Cannes Film Festival
பிரான்சில் நடைபெற்று வரும் 76வது கேன்ஸ் திரைப்பட விழாவில் உக்ரைனுக்கு ஆதரவாக ஒரு பெண் செய்த செயல் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. உக்ரைனுக்கு ஆதரவளிக்கும் விதமாக அந்த பெண் உக்ரைன் தேசியக் கொடி நிறத்தில் உடையணிந்து வந்ததுடன், திடீரென ஆடைக்குள் மறைத்து வைத்திருந்த ரத்த நிறத்திலான திரவத்தை தலையில் ஊற்ற ஆரம்பித்தார்.
இதனால் அங்கு பரபரப்பு நிலவியது. பாதுகாவலர்கள் அந்த பெண்ணை வலுக்கட்டாயமாக வெளியேற்றினர்.
உக்ரைன்-ரஷியா போர் ஓராண்டைக் கடந்து நீடிக்கிறது. போரை முடிவுக்கு கொண்டு வருவதுடன், அமைதி பேச்சுவார்த்தை மூலம் தீர்வு காணவேண்டும் என உலக தலைவர்கள் வலியுறுத்தி வருகின்றனர்.
அமைதிப் பேச்சுவார்த்தைக்கான முயற்சிகள் ஒருபுறம் நடைபெற்றாலும், அதற்கு முழுமையான பலன் கிடைக்கவில்லை. போரினால் ஏற்படும் பாதிப்புகள் குறித்து சர்வதேச கவனத்தை ஈர்க்கும் வகையில், உக்ரைனுக்கு ஆதரவாக சர்வதேச நிகழ்வுகளில் பரபரப்பான செயல்கள் அரங்கேறுகின்றன. அவ்வகையில், கேன்ஸ் திரைப்பட விழாவில் உக்ரைனுக்கு ஆதரவாக அந்த பெண் செய்த செயல் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.
GIPHY App Key not set. Please check settings