குபேர சிலை பூமிக்கு அடியில் இருந்து எடுக்கப்பட்டது
கடலூர் மாவட்டம் சிதம்பரம் அருகில் உள்ள கேந்திரக் கிள்ளை என்ற கிராமத்தில் பூர்விகமாக வசித்து வந்த ஒரு வம்சத்தை சேர்ந்தவர்கள் ஒரு நடு காட்டில் ஒரு நந்தி சிலை எடுக்கப்பட்டது பின்பு 1986 ஆம் ஆண்டு தந்தி சிலையை வைத்து கும்பாபிஷேகம் நடத்தப்பட்டது
பின்பு அவரது மகன் ரங்கநாதன் கனவில் ஒரு குபேர சிலை உள்ளது அதை எடுத்து கும்பாபிஷேகம் செய் என்று கூறியது 2009 ஆம் ஆண்டு மாசம் 5ஆம் தேதி இரவு 3:30 மணி அளவில் ஸ்ரீ சுயம்பு குபேர சிலை பூமிக்கு அடியில் இருந்து எடுக்கப்பட்டு பின்பு அவர் மிகவும் அலட்சியமாக இருந்ததால் அவருக்கு முதல் குழந்தை குபேரன் போல் கருப்பாக குள்ளமாக பிறந்தது இரண்டு வயது வரையில் பேச்சே கிடையாது நடக்க முடியாமல் இருந்தால் பின்பு பெரியவர்களுடைய உத்தரவு பிரகாரம் தனது சொந்த இடத்தில்இந்த கோவில் கட்டப்பட்டது
பின்பு அந்த குழந்தை பேச ஆரம்பித்தது இது ஒரு அதிசயத்தக்கது அப்படிப்பட்ட இந்த கோவிலில் தீபாவளி அன்று குபேர பகவானுக்கு தேன் பால் பன்னீர் தயிர் போன்ற அபிஷேகங்கள் நடைபெற்றது யாகங்கள் நடத்தி அந்த யாக தண்ணீர் நடத்தப்பட்டது பின்பு அனைவருக்கும் அன்னதானம் வழங்கப்பட்டது இந்த ஊரில் உள்ள கோயில்கள் ஒரு மர்மமாகவே உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது