கியூபாவை புரட்டி போட்ட எல்சா புயல்

கியூபா தேசத்தை நேற்று எல்சா புயல் புரட்டி போட்டது. அப்போது, கனமழை வெளுத்து வாங்கியதால் தாழ்வான பகுதிகள் வெள்ளத்தில் தத்தளித்தன. முன்னெச்சரிக்கை நடவடிக்கை 10 ஆயிரம் பேர் பாதுகாப்பான இடங்களுக்கு அழைத்துச் செல்லப்பட்டதால், உயிர்ச்சேதம் தவிர்க்கப்பட்டது.

முன்னதாக, டொமினிக் குடியரசையும், செயின்ட் லூசியாவிலும் எல்சா புயல் கோரத்தாண்டவம் ஆடியது. இதில், 3 பேர் பலியாகினர். தற்போது, அமெரிக்காவின் “ஃ”புளோரிடா மாகாணம் நோக்கி எல்சா புயல் நகர்கிறது. புயல் தாக்கினாலும் மியாமி நகரில் நடைபெற்று வரும் கட்டிட மீட்பு பணி தொய்வின்றி நடைபெறும் என மீட்புக் குழுவினர் தெரிவித்தனர்.

Add your comment

Your email address will not be published.

sixteen − 14 =