in

காவல் ஆணையரின் காரை எட்டி உதைத்து….. அப்பு வைத்துகொண்ட பிரபல நடிகை

காவல் ஆணையரின் காரை எட்டி உதைத்து அப்பு வைத்துகொண்ட பிரபல நடிகை

பிரபல நடிகை டிம்பிள் ஹயாத்தி காவல் ஆணையரின் காரை எட்டி, எட்டி உதைத்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.நடிகர் விஷாலுடன் வீரமே வாகை சூடும் திரைப்படத்தில் கதாநாயகியாக நடித்திருப்பவர் நடிகை டிம்பிள் ஹயாதி. தனது கவர்ச்சிகரமான நடிப்பில் ரசிகர்களை கிரங்கடித்து வரும் டிம்பிள் ஹயாத்தி தனது வீரத்தை ஹைதராபாத் மாநகர போக்குவரத்து காவல் ஆணையர் ராகுல் ஹெக்டேயிடம் வீரத்தை காட்டியதால் சர்ச்சையில் சிக்கியுள்ளார்.ஹைதராபாத்தில் உள்ள ஜர்னலிஸ்ட் காலனி பகுதியில் உள்ள அடுக்குமாடி குடியிருப்பு ஒன்றில் டிம்பிள் தனது காதலனுடன் வசித்து வருகின்றார்.இந்த நிலையில் அதே அடுக்குமாடி குடியிருப்பில் வசித்து வரும் காவல் ஆணையருடன் கார் பார்க்கிங் பகுதியில் கார்களை நிறுத்துவது தொடர்பாக இருவருக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது.சம்பவத்தன்று டிம்பிள் ஹயாதியின் காதலர் டேவிட் டிம்பிளின் காரை காவல் ஆணையர் ராகுல் ஹெக்டேவின் கார் மீது மோத செய்ததால் பரபரப்பு ஏற்பட்டது.அப்போது காரில் இருந்து ஆவேசமாக இறங்கி சென்ற டிம்பிள் ஹயாதி தனது பார்க்கிங்கில் உங்கள் காரை எப்படி நிறுத்தலாம் என்று கேட்டு காவல் ஆணையரின் காரை தனது காலால் எட்டி எட்டி உதைத்தாக கூறப்படுகிறது.சத்தம் கேட்டு வந்த போக்குவரத்து காவல் ஆணையர் ராகுல் ஹெக்டெ நடிகை டிம்பிள் ஹயாதியை சமாதானப்படுத்த முயன்றார்.எவ்வளவு எடுத்துக்கூறியும் அடங்க மறுத்த டிம்பிள் காரை எட்டி, எட்டி உதைத்ததுடன் அவரையும் திட்டித்தீர்த்துள்ளார்.இச்சம்பவம் தொடர்பாக காவல் ஆணையர் ராகுல் ஹெக்டேவின் ஓட்டுனர் சேத்தன், காவல் நிலையத்தில் நடிகை மீது புகார் அளித்தார்.அவர் அளித்த புகாரின் பேரில் வழக்குப்பதிவு செய்த போலீசார் நடிகையை காவல் நிலையத்திற்கு வரவழைத்து விசாரணை நடத்தினர். இரவு பாட்டில் நன்றாக குடித்துவிட்டு டிம்பிள் மற்றும் அவரது காதலர் இருவரும் சென்றுள்ளனர்.அப்போதுதான் இந்த ஆக்சிடெண்ட் ஏற்பட்டுள்ளது. இதைத்தொடர்ந்து சிசிடிவி காட்சிகளை ஆய்வு செய்யும் போது டிம்பிள் பாய் பிரண்டு தான் ஐஏஎஸ் அதிகாரி ராகுல் ஹெக்டே காரை மோதி உள்ளது என்பது தெரியவந்துள்ளது. மேலும் காரின் உரிமையாளர் என்பதால் டிம்பிள் மீது வழக்கு தொடரப்பட்டது.

What do you think?

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

GIPHY App Key not set. Please check settings

மனைவியை தன்காதலனுடன் சேர்த்துவைத்த நடிகர்

நடிகர் சரத்பாபு எதனால் உயிரிழந்தார்????? சுஹாசினி பரபரப்பு பேட்டி 😭😭😭